பக்கம்:நிதர்சனங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 & காணிக்கை

நான் கையாலா காத வெறும் முண்டம் தான். உன் னைப் போட்டு நச்சுப் புட்டேன். நான் உனக் காக வேண்டி ராவிலே பிச்சை எடுக்க ரோசிச்சேன் ; மனசு துணியல்லே! ஆனா, நீ எனக்கோசர ம் பிச்சை எடுத் திட துணிஞ்சிட்டே’

குறட்டைச் சத்தம் கேட்கிறது.

செல்லிக் குட்டி அசந்து துரங்குகிறாள். வலது கன்னத்தில் விழுந் திருந்த அடியின் வடுவைக் கண்ட மாத்திர த் தில், வாயைப் பொத் திக் கொண் டு அழு தான். கன்னத்தின் வடுவை மெதுவாகத் தடவிக் கொடுத்தபோது, கை சுட்டது; பதைப்பு மூண்டது. மகளுக்குக் காய்ச்சல் வந் தி டுச்சே! - செருமி ச் செருமி அழத் தொடங்கினான்.

வாசல் வழி ஒடிய மருதங்குடி ஒற்றையடிப் பாதையில் நிலவில் மிதந்தவர்களாக, நாலைந்து பேர்வழிகள் சல் லாபம் அடித்துக்கொண்டே நடத் தா ர்கள்.

முத்தரசன், குடிசையின் துவாரங்களின் வழியாக வெளியே ஊடுருவிப் பார்வையிடலானான்.

ஊர்ப்பெரிய மனிதர்கள் மகமாயிக்கு வேண்டுதல் செலுத்திப் பள்ளயம் படைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

‘ஓர் ஆசாமி எங்கிட்டோ ஒரு சிவன் கோயில் ஐம் பொன் சிலையை கை ஆள் வைச்சுத் திருடி, குல்லுமால்’ பண்ணி லட்சக்கணக்கிலே பணம் சேர்த் தவன் ; இன்னொரு புள்ளி கள்ள நோட்டுக்காரன்; மறு பேர் வழி கலப்படக்காரன்; நாலாம் ஆள் அரசியல் மூலம் புதுத் பணக்காரன் ஆனவன். இப் படிப்பட்ட சமுதாயத் துரோ கிங்களெல்லாம் சட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/118&oldid=680913" இலிருந்து மீள்விக்கப்பட்டது