பக்கம்:நிதர்சனங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கஞ்சிக் கலயம்

அன்னக்கிளி இப்போது கண் கண்ட தேவதை யெனப் புன்னகை செய்கிறாள். அயித்தை மகனே! ஆசை மச்சானே : இப்ப கெலிச்சது தான் இல்லே! எங்க அண்ணனாக்கும்!” என்று விம்மி, ஆனந்தக் கண்ணிரைப் பூச்சொரிந்தாள்!

மெய்தான், அன்னக்குட்டி!’

அதோ...ஈரம் சொட்டச் சொட்ட நடந்து போய்க் கஞ்சிக் கலயத்தைச் சுமந்துகொண்டு, நேச மச்சான் வீரமணியின் காலடியிலே சமர்ப்பிக்கிறாள், அழகுக் கன்னி அன்னக்கிளி!

உச்சிப்பனையிலே உச்சிக் கதிரவன் விஷமப்

புன்னகையுடன் விளையாடிக் கொண்டிருந்த தல்ல நேரம் அல்லவா அது?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/174&oldid=680975" இலிருந்து மீள்விக்கப்பட்டது