பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

நிதிநிலை அறிக்கை மீது

கலைஞர் மு. கருணாநிதி : உங்களை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் வாபஸ் பெறப்பட்டது. அதுமாத்திரமல்ல. காவிரிப் பிரச்சினை இவ்வளவு பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டுமென்று துணைத்தலைவர் அவர்கள் தயாராக இருந்தால், நானும் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன். காவிரிப் பிரச்சினை மிக நுணுக்கமாக விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை. ஐம்பது பேரை வைத்துக் கொண்டு விவாதிக்கக்கூடிய பிரச்சினையல்ல அது. அந்தப் பிரச்சினைகளினுடைய நுணுக்கங்கள் சாதாரணமானதாக இல்லை. இவைகளை எல்லாம் பற்றி நாம் ஆழமாக விவாதிக்க வேண்டும். அந்த ஒப்பந்தம் எப்படி ஏற்பட்டது? அந்த ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? கர்நாடக அரசு என்ன சொல்கிறது? இவைகளைப்பற்றியெல்லாம் விவாதிக்க

வேண்டும். அன்றைக்கு பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் உறுதி அளித்தார்கள், “நீங்கள் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்; வழக்கு இருக்கும் போது என்னால் மூன்று மாநில அமைச்சர்களையும் வைத்துப் பேச முடியாது; மூன்று மாநில அமைச்சர்களையும் உட்கார வைத்துப் பேச இயலாது, எனவே வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டால் மூன்று அமைச்சர்களையும் உட்கார வைத்துப் பேச முடியும்” என்று சொன்னார்கள், அப்படிப் பேசி, கடைசியாக முடிவும் எடுக்கப்பட்டது, திரு. ஜகஜீவன்ராம் அவர்கள் தலைமையிலே உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கப்பட்டு கையெழுத்துப் போடுகிற நேரத்திலே, நாங்கள் எதைச் சொல்லிவிட்டு எந்த முடிவை ஏற்றுக் கொண்டோமோ அது கையெழுத்துக்கு வரும்போது மாற்றப்பட்டிருந்த காரணத்தால், நானும் திரு.சாதிக் பாட்சா அவர்களும், திரு. ப.உ.சண்முகம் அவர்களும், திரு. மாதவன் அவர்களும், டில்லிக்குச் சென்று அதை எதிர்த்து, கையெழுத்துப் போடாமல் திரும்பி வந்து விட்டோம், ஆகவே நீங்களே தவறாகக் கருதிக் கொள்ளக்கூடாது. காவிரிப் பிரச்சினையில் அன்றைக்கு என்ன ஒரு நிலையை தமிழக அரசு எடுத்ததோ அதே நிலையைத்தான் இன்றைக்கும் தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையிலே காவிரிப் பிரச்சினையிலே விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதிலே எதிர்க்கட்சியாக

து