கலைஞரின் சட்டமன்ற உரைகள்
111
உணர்ந்து இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பாராட்டத் தக்க ஒன்றாகும்.
மற்றொன்று, இந்திய நிலப்பரப்பைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற வலுவான இந்தியாவும், மக்களை வாழவைப்பதற்கு ஏற்ற வளமான மாநிலங்களும் அமைய வேண்டும்.” என்ற கருத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்கள். இந்திய ஒருமைப்பாட்டிற்கு உட்பட்ட மாநிலத் தன்னாட்சி அமைய வேண்டும். அதற்கான ஆக்கம் ஏற்பட வேண்டும், கூட்டாட்சி அமைப்பில் மாநிலத் தன்னாட்சிக் கோட்பாடு என்பது ஒரு அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு அரசியல் தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்ற கருத்தையும் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் இந்த அறிக்கையிலே கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இது, தொடர்ந்து 2,3 ஆண்டுக்காலமாக ஆளும் கட்சியில், குறிப்பாக இந்த அரசில் ஏற்பட்டுள்ள ஒரு முன்னேற்றம் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் மாநில, சுயாட்சி என்ற அந்தச் சொற்றொடரேகூட அறிஞர் அண்ணா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்ற கருத்து ஆளும் கட்சி உறுப்பினர்களால் 1974ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சொல்லப்பட்டு, 1974ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட அந்தக் காலக்கட்டத்திலேகூட ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த அந்தக் கொள்கையை இன்றைக்கு நிதியமைச்சர் அவர்கள் இந்த அறிக்கையின் வாயிலாக ஏற்று அண்ணா அவர்களின் அந்தக் கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்ற அளவில் நான் அதனையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பொதுவாக இந்த நிதிநிலை அறிக்கை தமிழ் பதிப்பில் 28ஆம் பக்கத்தில் நிதியமைச்சர் அவர்கள் மொத்த நிதிநிலைமை பற்றி எடுத்துக்கூற விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டுகளில் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் வருவாய்க் கணக்கில் வருவாயையும், வருவாய்க் கணக்கில் செலவையும் குறிப்பிட்டுவிட்டு,