பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

ஒழுங்காகச்

115

திட்டங்களுக்காக வகுத்து ஒதுக்கப்பட்ட தொகை செலவழிக்கப்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தர வேண்டுமென்றால்; ஐ.ஆர்.டி.பி. ஒருங்கிணைத்த ஊரக வளர்ச்சித் திட்டம், இன்டக்ரேட்டட் ரூரல் டெவலப்மெண்ட் புரோகிராம். இதற்கு 1985-86 திட்ட மதிப்பீடு 29.5 கோடி ரூபாய். ரிவைஸ்ட் எஸ்ட்டிமேட், திருத்திய மதிப்பீடு 17.55 கோடி ரூபாயாக இருக்கின்றது. ஆக கடந்த ஆண்டு இந்த ஐ.ஆர்.டி.பி. திட்டத்திற்கு 12 கோடி ரூபாய் குறைவாகச் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 11.61 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த இந்த ஆண்டு ஆண்டு மேலும் மேலும் 3 கோடி

ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. ஊரக வேலைவாய்ப்பு தேசீயத் திட்டம் N.R.E.P. (National Rural Employment programme) 1985-86இல் திட்ட மதிப்பீடு Budget Estimate 53.48 கோடி ரூபாய். ஆனால் செலவழிக்கப்பட்ட பிறகு திருத்திய மதிப்பீடு 40.81 கோடி ரூபாய். சுமார் 13 கோடி ரூபாய் இதிலே С குறைத்து செலவழிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த R.L.E.C.P. இதில் அரசினுடைய குறிப்புகளிலும், நிதிநிலைக் குறிப்பிலும் பட்ஜெட் - இதில் அரசினுடைய குறிப்புகளிலும், பட்ஜெட் மெமோராண்டத்திலும் சொல்லப்பட்ட விளக்கம். Prime Minister's Employment Guarantee Scheme for Rural Landless Labourers பிரதமரின் கிராமப்புற நிலமற்றோர் வேலை வாய்ப்புறுதித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திட்டத்தில் 1985-86இல் பட்ஜெட் எஸ்ட்டிமேட் 65 கோடி ரூபாய். ஆனால் திருத்திய மதிப்பீடு 34.43 கோடி ரூபாய். எனவே கடந்த ஆண்டு 31 கோடி ரூபாய் குறைவாகச் செலவழித்தவர்கள், இந்த ஆண்டு அதே 34 கோடி செலவழிக்கப்போவதாக, 1986-87இல் குறிப்பிட்டிருக் கிறார்கள். எனவே மாநில அளவிலே இந்த வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப் போகிற திட்டத்தில் இந்த அளவுக்கு பெருந் தொகை குறைக்கப்பட்டு, செலவழிக்கப்படாமல் இருப்பது அந்தத் திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

-