பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

125

பேர்களுக்கு மாத்திரம் வீட்டுவசதி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மீது 1 கோடியே 50 இலட்சம் பேர்களுக்கு யார் வீடு கட்டுவது என்ற கேள்வி எழும். இந்த அரசு அவர்களுக்கு வீடுகளை 3 ஆண்டுகளுக்குளேயே கட்டித் தருமென்று சொல்கிறது. அந்த மூன்று ஆண்டுகளுக்குள் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன். இந்த ஆண்டு 26 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி தரப்படவே இல்லை. அந்தத் திட்டத்தைத் தொடங்க முடியுமா என்ற ஐயப்பாட்டிற்கு அரசு விளக்கம் தர வேண்டும். எனவே எந்த சிந்தனையும் இல்லாமல் அடிக்கடி தேர்வு வரும்போதெல்லாம் இப்படிப்பட்ட மகத்தான, பிரம்மாண்டமான அறிவிப்புகளை வழங்குவது இந்த அரசுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

அடுத்து, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை. One job for each family அது மகத்தான அறிவிப்பு. ஏற்கெனவே 1983-84 நிதிநிலை அறிக்கையில் நம்முடைய நாவலர் அவர்கள் 'குடும்பத்தில் ஒருவருக்கு வேலை' என்ற தலைப்பில் ‘அத் திட்டங்களுக்கான விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இந்த நிதியாண்டில் 15 கோடி ரூபாய் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது' என்று இந்த அவையிலும் அந்த அவையிலும் படித்தார்கள். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற தலைப்பில் அதற்கு 15 கோடி ரூபாய் அந்த நிதியாண்டில் செலவாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சொன்னார்கள். அதற்குப் பிறகு 1984-85இல் நிதிநிலை அறிக்கையை எடுத்துப்பார்த்தேன். அதில் 'குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை' என்ற தலைப்பையே காணவில்லை. 1985-86 நிதிநிலை அறிக்கையையும் படித்துப் பார்த்தேன். அதிலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை'

என்ற

தலைப்பையே காணவில்லை. நண்பர் திரு. சுப்பு அவர்கள் அழகாகச் சொல்வார்கள். குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என்றால், அந்தந்தக் குடும்பத்தில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று திரு. சுப்பு அவர்கள் சொல்லக்கூடும்...

திரு. க. சுப்பு: தலைவரவர்களே, நாவலர் அவர்கள் அன்றைக்கே சொல்லிவிட்டார்கள். வேலை இருக்கிறது, பார்த்துக்கொள்ள வேண்டும்.