பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

நிதிநிலை அறிக்கை மீது

கலைஞர் மு. கருணாநிதி: அதைப்போல கர்ப்பவதி களுக்கு பேறுகாலத்திற்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு 150 ரூபாய் தரப்படுமென்று ஒரு பெரிய அறிவிப்பு; அதைப் பார்த்து தாய்மார்கள் எல்லாம் இந்த 150 ரூபாய்க்காக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மீறலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிதிநிலை அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் கொட்டம்பட்டி என்ற ஊருக்கு மட்டும்தான் முதலில் பணம் தரப்படுமென்று சொல்லப்பட்டது. இன்றைக்கு கொட்டம்பட்டியிலுள்ள தாய்மார்களுக்குத் தரப்படவே இல்லை. பிறகு கொட்டம்பட்டி தொடரவே இல்லை. அதைப்போலத்தான் சென்னையிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புத் தருவது என்று சொல்லி ஒரு திட்டத்தை அறிவித்தார். 3 சக்கர வண்டிகளைத் தயாரித்து - முதலில் வெள்ளோட்டமாக 5 வண்டிகளை விட்டு அதிலே பட்டதாரிகள் காய்கறிகளை மலிவான விலையில் விற்பனை செய்வார்கள் என்றும், அவரவர்கள் வீட்டிற்கே இந்த வண்டிகளில் கொண்டுவந்து விற்பார்கள் என்றும், வீட்டிலுள்ள பெண்டிர் அங்கேயே காய்கறிகளை வாங்கிக் கொள்கிற அளவுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சொல்லி இப்படி 5 வண்டிகள் 500 வண்டிகளாகப் பெருகும், பிறகு திருச்சி, கோவை, சேலம் போன்ற இடங்களில் இப்படிப்பட்ட பட்டதாரிகளுக்கு காய்கறிகளை விற்கிற மகத்தான வேலை தரப்படும் என்றும், அந்த சைக்கிள்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ், உதிரிப் பாகங்கள் செய்வதற்காகக் கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் ள் உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. அந்தத் திட்டமும் தொடங்கியதோடு சரி, தொடரவே இல்லை.

-

பிறகு பாம்புக்கடி வைத்தியம் என்று ஒரு திட்டம். ஒவ்வொரு ஊரிலும் பாம்பு கடித்தால், அதற்கு வைத்தியம் செய்தால், அவர்களுக்கு இவ்வளவு ஊதியம் என்று சொல்லி, திட்டம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு எங்கேயும் பாம்புகள் கடிக்காமல் பயந்து கொண்டு பதுங்கிப் போய்விட்டனவோ எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு அந்தத் திட்டம்பற்றி விவரமே இல்லை. இது எப்படி