132
நிதிநிலை அறிக்கை மீது
மாண்புமிகு திரு. க. இராசாராம்: அரியலூர் சிமெண்ட் ஆலையில் சில சிக்கல்கள் காரணமாக, அதில் சாம்பல் அதிகமாக வந்துவிடுகிறது என்ற பிரச்சினை காரணமாக, அதிலே தீவிரமாக ஈடுபட்டு, தற்போது அது சரியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு அது இலாபத்திலே ஓடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர் மு. கருணாநிதி: 5 இலட்சம் மெட்ரிக் டன் டார்க்கெட் வந்ததா என்பதைப்பற்றித்தான் நான் கேட்கிறேன். மாண்புமிகு திரு. க. இராசாராம்: 5 இலட்சம் மெட்ரிக் டன்கள் இன்னும் வரவில்லை.
கலைஞர் மு. கருணாநிதி: நான் சொன்னதை மு ஏற்றுக்கொண்டதற்காக நன்றி
மாண்புமிகு திரு. க. இராசாராம்: இல்லை, இல்லை ஏற்கெனவே பல சிக்கல்கள் இருந்தன. சாம்பல் அதிகமாக வந்துவிட்டது. அதனால் பல சிக்கல்கள் வந்து, அதை இப்போது மாற்றியிருக்கிறோம். அதிலே ஒரு வருடகாலமாக தீவிர கவனம் செலுத்தி முயற்சியிலே ஈடுபட்டுக்கொண்டிருக் கிறோம். இந்த ஆண்டு இலாபத்தில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கலைஞர் மு. கருணாநிதி: இதே மலரில், 'புராஜெக்ட்ஸ் அண்டர் புரொடக்ஷன்' அதாவது திட்டம் ஜாயிண்ட் செக்டார் புராஜெக்ட்ஸ் அண்டர் புரொடக்ஷன். உற்பத்தியிலே இருக்கின்ற ஜாயின்ட் செக்டார் தொழில்கள் என்கின்ற அந்த தலைப்பில் வருகிறது. ஒரு தொழிற்சாலை சதர்ன் ஹைட்ரோ கார்பன்ஸ் லிமிட்டெட், குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் இதற்கு ரூபாய் 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் மூலதனம். அந்த மூலதனத்தோடு தொடங்கப்பட்டது. அதிலே 60 பேர்கள் பணியாற்றுகிறார்கள் என்றெல்லாம் இந்த மலரில் குறிப்பிட்டிருக்கின்றார்கள் அதற்கும் அழகான படம் போட்டு ஒரு வெளியிட்டிருக்கின்றார்கள். நான் கடந்த 28ஆம் தேதி அறந்தாங்கிக்கு புதுக்கோட்டை வழியாகச் சென்றிருந்தேன் அப்போது அந்தப் படத்திற்குரிய அந்த ஆலை அங்கே
மலர்