பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

147

உரை : 23

நாள் : 03.04.1989

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பாடலோடு தொடங்கப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் போதும், அவருடைய பாடலையே நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.

'கரை சேற்றால் தாமரையின் வாசம் போமோ! காரிருள் தான் சூரியனை மறைப்பதுண்டோ! பேரெதிர்ப்பால் உண்மை தான் இன்மையாமோ! (மேசையைத் தட்டும் ஒலி.)

என்று அந்தப் புரட்சிக் கவிஞன், பல ஆண்டுகளுக்கு முன்பு பாடிவைத்த அந்த உண்மை வரிகளை உள்ளத்திலே பதிய வைத்துக்கொண்டு என்னுடைய பதிலுரையைத் தொடங்கு கின்றேன்.

இந்த நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தில் ஆளும் கட்சியின் சார்பிலும், எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. சார்பிலும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், தமிழ்நாடு பார்வர்டு பிளாக், தமிழ்நாடு ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பிலும், எதிர்க்கட்சிக்கு அடுத்த கட்சியாக அமர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பிலும் சற்றொப்ப 50க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

அரசின் சார்பிலே நான் தயாரித்து இந்த அவை முன்னால் வைத்துள்ள நிதிநிலை அறிக்கை அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய வேத புத்தகமென்று நான் சொல்ல முன்வரவில்லை. குறைபாடுகள்