பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

155

என்று ஒரு செய்தியும் அதைத் தொடர்ந்து அதே பத்திரிக்கையில் 'தமிழ்நாட்டின் ஆண்டுத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து, மத்திய உள்துறை மந்திரி துணை அவர்கள் ப. சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்' என்று ஒரு செய்தியும் அதிலே வந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், தமிழ்நாடு அரசு கேட்டது 1,430 கோடிதான். திட்டத்திற்காகக் கேட்டதே 1,430 கோடி. ஆனால் திட்டக்குழு ஒதுக்கியது 1,457 கோடி. ஏன் என்பது உங்களுக்குப் புரியும். தேர்தல் ஆண்டு என்பதால், நீங்கள் கேட்டது 1,430 கோடியாக இருந்தாலும், நாங்கள் 1,457 கோடி ஒதுக்குகிறோம். என்று அறிவித்தார்கள். 27 கோடி ரூபாய் அதிகம் பெற்றுவிட்டோம் என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டார்கள். இதிலே திட்டத்திற்கான முழுத் தொகையும், மத்திய அரசே கொடுப்பது அல்ல, திட்டம் என்றால் திட்டத்திற்கான ஒப்புதல், அதற்குப் பெயர்தான் திட்டத்தை ஒத்துக் கொண்டோம் என்பது. அவர்கள் ஓரளவு பணம் தருவார்கள். ஒரு திட்டத்திலே மூன்றிலே ஒரு பங்குகூட மத்திய அரசினுடைய உதவி கிடைக்காது. நாம் இந்த மாநிலத்திலே உருவாக்கிக் கொள்கின்ற ரிசோர்சஸ், நிதி ஆதாரங்கள், அவைகளைக் கொண்டுதான் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இதில் என்னவென்றால் 1987-88 ஆம் ஆண்டைவிட, 207 கோடி ரூபாய் அதிகமாகக் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டாலும் கூட. வாக்களித்தபடி எந்த ரிசோர்சும் கவர்னர் ஆட்சியிலே திரட்டப்படவில்லை. அதனால் கவர்னர் ஆட்சியில் 1,457 கோடி என்பது, 1,202 கோடி ரூபாய் என்று திட்டம் குறைந்தது. அதற்கு 60 நாளில் பொறுப்பேற்றிருக்கிற நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அதற்கு முழுப் பொறுப்பும் ஏற்கவேண்டியது குடியரசுத் தலைவருடைய ஆட்சிதான்.

உண்மை

அந்தக் காலத்திலேதான் 409 திட்டங்கள் கைவிடப் பட்டன. 409 திட்டங்கள் கைவிடப்பட்டும். 1987-89ஆம் ஆண்டை விட 135 கோடி ரூபாய் குறைந்துவிட்ட ஒரு நிலையும் அன்றைக்கு உருவானது. திட்டத்தைக் குறைத்தும் 1988-89 ஆம் ஆண்டு இறுதிப் பற்றாக்குறை ஏறத்தாழ 175