158
நிதிநிலை அறிக்கை மீது
இன்றைக்கு மத்திய சர்க்கார் அரிசி விலையை ஏற்றிய இந்த நிலை வரையில் 170.15 கோடி ரூபாய் சுமையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கஷ்டம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது நிதி நிலை அறிக்கை இங்கே நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த 60 நாளிலேதான் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். நான் அவைகளை யெல்லாம் ஒரு வரியில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். சட்டமன்ற மேலவை அமைக்கின்ற தீர்மானம், மாநகராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்துதல், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் உறுப்பினர் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்தல், ஊராட்சி ஒன்றியங்களுக்கு அதிகாரங்களை ஓரளவு திரும்ப அளித்தல், மகளிருக்கு 30 சதவிகிதம் அரசுப் பணியில் ஒதுக்கீடு செய்தல், அரசுப் பணியில் சேர்வோருக்கு வயது வரம்பை 30 என உயர்த்துதல், விவசாயிகள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய தாமத நிலுவைத் தொகைக்கான அபராத வட்டியை அறவே ரத்து செய்தல், சத்துணவுக்கூட ஊழியர்களைப் பகுதி நேர நிரந்தர அலுவலர்களாக ஆக்குதல் ஆகியவை.
மின்
இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் பற்றிய குறிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதி களையும் நான் உங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக் கிறேன். விவசாயிகளுடைய பழைய கூட்டுறவுக் கடன் பாக்கி ரத்துக்காக ஏற்கனவே கட்டவேண்டிய தொகையும் சேர்த்து 106 கோடி ரூபாய்; ஆரம்பச் சுகாதார நிலையங்களை உருவாக்க 8.31 கோடி ரூபாய்; ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை அளிக்க 3.40 கோடி ரூபாய்; ஊரகக் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்க 20 கோடி ரூபாய், ஆதிதிராவிடர்களுக்கும், மீனவர்களுக்கும் இலவச கான்கிரீட் வீடுகளைக் கட்ட 49 கோடி ரூபாய்; ஆதிதிராவிடர் பழங்குடி மாணவர்களுக்குப் பட்டப்படிப்புவரை இலவசக் கல்வியளிக்க
2.25 கோடி ரூபாய்; ஊரகப் பகுதிகளில் படித்த
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் தர 6 கோடி ரூபாய்; வீட்டு மனைகளை ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாக வழங்க 2.35 கோடி ரூபாய்; ஏழை நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த