பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

பெண்களுக்குப்

159

பட்டப்படிப்பு வரையில் இலவசக் கல்வியளிக்க 50 இலட்சம் ரூபாய்; வறுமையில் உழலும் குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் 8ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படித்துத் தேறினால் அவர்களுக்குத் திருமணச் செலவு வழங்க 6 கோடி ரூபாய்; வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் கருவுற்ற மகளிருக்கு நிதியுதவிக்காக 4 கோடி ரூபாய்; விவசாயிகள் பயன்படுத்தும் பம்ப் செட்டுகள் உள்ளிட்ட விவசாயச் சாதனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் விற்பனை வரியை ரத்துச் செய்கின்ற வகையிலே வருவாய் இழப்பு 4 கோடி ரூபாய்; பலமுனை வரியை ஒருமுனை வரியாக மாற்றுதலும், வணிக நல அமைப்பை ஏற்படுத்துதலும், இதற்காக வருவாய் இழப்பு 50 இலட்சம்; வணிக நல வாரியத்தை ஏற்படுத்த 2 கோடி ரூபாய் என்ற வகையிலே இந்தச் செலவினங்கள்.

ஏனைய தேர்தல் வாக்குறுதிகள் அவைகளையும் வரிசைப் படுத்திக் கூற விரும்புகிறேன். வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய நாட்களில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க 14 கோடி ரூபாய். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள எல்லாத் தாய்மார்களுக்கும், ஆடவருக்கும் ஆண்டு தோறும் இலவச கைத்தறி வேட்டி, சேலை வழங்க 27.20 கோடி ரூபாய். முதியோர் உதவித் தொகையை உச்ச வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் 60 வயதடைந்த அனைத்து விவசாயத் தொழிலாளிகள், அனாதைகள், ஆதரவற்ற விதவைகள் அனைவருக்கும் - இத்தனை பேருக்குத்தான் என்ற எண்ணிக்கையின்றி 35 ரூபாயை 50 ஆக உயர்த்திக் கொடுக்க சுமார் 4 லட்சம் பேர்களுக்கு 21 கோடி ரூபாய். விவசாயத் தொழிலாளர், சிறு விவசாயிகள், நெசவாளர், மீனவர், கல்லுடைப்போர், பாரம் தூக்குவோர், பளுவண்டி இழுப்போர், கைவினைஞர் கட்டிடத் தொழிலாளர் போன்ற தினக் கூலி வேலை பார்ப்போர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் குடும்பத்திற்கு 2,000 ரூபாய் வழங்குகின்ற இந்தத் திட்டத்திற்காக 5 கோடி ரூபாய்; விபத்துக்களில் கட்டிடத் தொழிலாளர்கள், லாரி, ஆட்டோ