பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

17

2

உரை : 20

நாள் : 14.03.1983

கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, 1983-84ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சில கருத்துக்களை கூறுகின்ற வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

நிதிநிலை அறிக்கை இந்த மன்றத்திலே தாக்கல் செய்யப் பட்டபோது பத்திரிகையாளர்கள் என்னையும் மற்றுமுள்ள கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கருத்துக்களைக் கேட்ட போது இந்த நிதிநிலை அறிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஏற்பட்டுள்ள கொடுமையான வறட்சிக்கு தீர்வு காண்பதற்குரிய வகையிலோ துன்பப்படுகின்ற மக்களுக்கு நல்வாழ்வை அளிக்கின்ற விதத்திலோ அமையவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

குறிப்பாக அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும் கோடிட்டு காட்டியிருக்கிறோம்.

குடும்பம் ஒன்றுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும் என்று பல நாளாக இந்த அரசின் சார்பில் முழங்கப்பட்டு வருகின்ற அந்த முழக்கம் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதன் மூலமாக எப்படி நிறைவேற்றப்பட இயலும். அது சாத்தியக்கூறு அல்ல எனவே இது மக்களை திசை திருப்புகின்ற அல்லது ஏமாற்றுகின்ற ஒரு அறிவிப்பாகத்தான் இருக்கமுடியும் என்பதையும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் மற்றும் உள்ள கட்சிகளின் சார்பிலேயும் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

2 - க.ச.உ. (நிஅ) ப-2