பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

179

அவர்களுக்குக்கூட கருத்து வேறுபாடு இருக்கலாம். அது ஆசையின் பாற்பட்டது. அதை அவர்கள் சொல்லித்தான் தீர வேண்டும். எனக்குத் தெரியும். சொல்லித்தான் தீரவேண்டும். இருந்தாலும் கூட திரு. சட்டநாதன் அவர்கள் அந்தச் சமுதாயத்தில் ஒரு மேதை. அவர்கள் இந்தக் குழுவிற்குத் தலைவராக இருந்து, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்தக் குழுவிலே பல கருத்துக்களைச் சொன்னார்கள். அவர் இந்த இட ஒதுக்கீட்டைப் பற்றி என்ன சொல்கிறார் என்றால், 'இந்தப் புதிய ஒதுக்கீடு மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர் மரபினருக்கும், அதிலும் குறிப்பாக வன்னிய

சமூகத்தினருக்கும் நிச்சயமாகப் பலனளிக்கும்; முதலாவது பிற்பட்டோர் கமிஷனில் நானும் இதே நோக்கங்களுக்காகத் தான் பாடுபட்டேன். அந்தக் கமிஷனில் இருந்த மற்ற இரண்டு உறுப்பினர்கள் மாற்றுக் கருத்து அளித்திருந்தார்கள், அதனால்தான் அந்தப் பரிந்துரைகளை அப்போது அரசு ஏற்காமல் விட்டுவிட்டது என்று திரு. சட்டநாதன் அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். திரு திரு. அம்பாசங்கர் அவர்களும் ஒரு குழுவின் தலைவராக இருந்து பணியாற்றியவர்கள். அவர் சொல்கிறார், 'சமுதாயத்தில் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்த சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோளுடன், பிற்பட்ட வகுப்புகளுக்கு இருந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து 20 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பிரித்து, சமுதாயத்திலே மிகுந்த நலிந்த பிரிவினருக்கு முதலமைச்சரவர்கள் வழங்கி இருக்கிறார்கள்; முதலமைச்சரின் குறிக்கோள் மிகத் தெளிவானது என்பதை இதற்காக ஒரு தனித் துறையையே உருவாக்கி, அதற்குத் தலைவராக அந்தச் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையே நியமித்திருப்பதும், இந்தத் துறையை தனது பொறுப்பிலேயே வைத்திருப்பதும் தெளிவாக்குகிறது; பிற்பட்டோரில் மிகப் பெரும்பான்மையாகவுள்ள வன்னியர்கள் இந்தச் செய்கையால் பெரிதும் பயன் பெறுவார்கள் என்று அவர் சொல்கிறார். அதைப் போலவே பெரியவர் திரு. மாணிக்கவேலர், அவருடைய பாராட்டில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்விக்கு