182
நிதிநிலை அறிக்கை மீது
கோடி ரூபாய் சொத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையை தட்டும் ஒலி).
அது மாத்திரமல்ல, நான் அப்போதே சொன்னேன், பைல்கள் அணிவகுக்கும் என்று. இன்னும் தொடர்ந்து அணிவகுக்கும்; இன்றைக்குச் சில அணிவகுக்கின்றன. மாமல்ல புரத்திலே ஒரு முறைகேடு. மாமல்லபுரத்திலே அரசு நிறுவனமான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு ஓட்டலை லாபத்திலே நடத்தி வந்தது. ஆண்டொன்றுக்கு ரூ. 1 லட்சம் அல்லது 12 லட்சம் லாபம் பெற்று வந்த அரசாங்கத்திற்குச் சொந்தமான, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான அந்த ஓட்டலை ஒரு ஜாயின்ட் செக்டார் கூட்டு நிறுவனம் – என்ற பெயரிலே மாற்றினார்கள். அதற்கு ஒரு ஆளைப் பிடித்தார்கள். அதற்கு பப்ளிசிடி கொடுத்தல்ல. அவர் பெயர் என்ன தெரியுமா? 'மோகன் ராவ் தண்டமுடி' (பணமே தண்டமாகப் போகிறதல்லவா ஆகவே தண்டமுடி). மோகன்ராவ் தண்டமுடி என்பது அவர் பெயர். அவர் அந்நிய நாட்டில் வெளிநாட்டிலே வாழ்கிற இந்தியராம். கோடம்பாக்கத்தில்தான் இருக்கிறார் அவர்! (பலத்த சிரிப்பு). அந்த மோகன்ராவ் தண்டமுடிக்கு- என்.ஆர்.ஐ. திட்டத்தின் அடிப்படையில் அந்த ஓட்டலை ஒப்படைக்கக் கடந்த அரசு முடிவு செய்தது. அந்த ஓட்டலுடைய மதிப்பு என்ன தெரியுமா? அதிகாரிகளுடைய குழு மதிப்பீட்டின்படி 1 கோடியே 60 லட்சம் ரூபாய். மாமல்லபுரத்திலே இருக்கிற நம் டூரிஸ்ட் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான ஓட்டலின் மதிப்பு அதிகாரிகள் போட்ட மதிப்புப்படி 1 கோடியே 60 லட்சம் ரூபாய். அதற்குப் பொதுப் பணித்துறை பரிந்துரை செய்தது. ரூ. 93 லட்சம். ஆனால் அரசாங்கம் இந்த 93 லட்சத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை; 1 கோடியே 60 லட்சத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை; அந்தக் கூட்டுத் துறை நிறுவனத்திற்கு இவர்கள் போட்ட சொத்து மதிப்பு ரூபாய் 56.44 லட்சம்! கடந்த ஆட்சியில் இந்த அளவுக்கு மதிப்பிடப்பட்டு அவருக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. ஏறத்தாழ 1 கோடி ரூபாய் அளவுக்குத் தொகை குறைத்து மதிப்பிடப்பட்டு, கொடுக்கப்பட்டுவிட்டது. அதாவது இந்த ரூ. 56 லட்சத்திலும், ரூ. 52 லட்சம் அரசாங்கத்தின் முதலீட்டுக்காக