பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

நிதிநிலை அறிக்கை மீது

உரை : 24

நாள் : 28.3.1990

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, திரு. வீராசாமியைப் பற்றிக் குறிப்பிட்ட நேரத்தில் * அதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அரிசி பேரத்திலே சம்பந்தப்பட்டதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா பொது மேடைகளிலே பேசி அது பத்திரிகையிலே வந்து 6 கோடிரூபாய் ஊழல் என்று வந்து, இப்படிப்பட்ட அவதூறுகள் வருகிற நேரத்திலே இது சுதந்திரமா. இது அடக்குமுறை அல்லவா என்றெல்லாம் யாரையும் கேட்கக் கூடாது. அவரவர்கள் தாங்கள் நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள நீதிமன்றத்தின் துணையை நாடவேண்டியிருக்கிறது. அதன்படி அரசின் சார்பிலே செல்வி ஜெயலலிதா மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்திலே அவர்கள் அதை விளக்கி இருக்கிறார்கள். உண்மையிலேயே பேரம் நடந்ததா இல்லையா என்பதை நீதிமன்றம் சொல்ல இருக்கிறது. எனவே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது. திரு. வீராசாமி* என்று சொன்ன அந்தச் சொற்களை அவைக் குறிப்பிலேயிருந்து நீக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றாகத் தெரியும். நீதிமன்றத்திலே இருக்கிற எந்த வழக்குத் தொடர்பாகவும் பொதுவாகவே பேசுவதே கூடாது. எனவே அமைச்சர் தொடர்பான அந்தக் குற்றச்சாட்டு அவைக் குறிப்பிலேயிருந்து நீக்கப்படுகிறது. நான் மணியை அடிக்காமலேயே உங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதை மதித்து *மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப் பெற்றது.