பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

நிதிநிலை அறிக்கை மீது

325.07 கோடி ரூபாயிலிருந்து 160.74 கோடி ரூபாயாகக் குறைத்தது சாதாரணமான சாதனையல்ல. ஆயத்துறை நிர்வாகத்தில் காணப்பட்ட ஓட்டைகளையெல்லாம் அடைத்ததால் அரசுக்கு 134 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிட்டியது. ஆயத்துறை நிர்வாகத்தில் மேற்கொண்ட இந்த ஒரே ஒரு நடவடிக்கை, சிறந்த, செம்மையான நிதி நிர்வாக சாதுரியமாகும்; இதுதான் நடப்பு ஆண்டின் நிதிப்பற்றாக் குறையைக் குறைத்திடப் பெரிதும் காரணமாக இருந்தது; நிதி ஆதாரங்களைத் திரட்டி, பெருக்குவதற்கு இது ஒரு சரியான பின்னணியாகும். விவசாய பம்ப் செட்டுகளுக்கு மேலும் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அரசின் ஊரக வளர்ச்சி குறித்த அக்கறையினை தெளிவாக எடுத்துக்காட்டும் என்று எக்கனாமிக் டைம்ஸ்’ இவ்வளவு அற்புதமான ஒரு விமர்சனத்தை இந்த அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து எழுதி வெளியிட்டு இருக்கின்றது. இ

மத்திய மாநில அரசு உறவுகளைப் பற்றித் தொடர்ந்து நம்முடைய வரவு செலவுத் திட்டத்தில், குறிப்பாக, அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலம் முதல் நாம் சுட்டிக்காட்டி வருகின்றோம். அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலமாக இருந்தாலும் சரி, இடையிலே அ.தி.மு.க. ஆட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மீண்டும் இப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலமாக தொடர்ந்து மலர்ந்து இருக்கின்ற இந்த நேரமாக இருந்தாலும் சரி, மத்திய மாநில உறவுகளில் மேலும் செம்மையான ஒரு நிலை உருவாக வேண்டுமென்றும், எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் கையையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழல் மாநில அரசுகளுக்கு இருந்திருக்கக்கூடாது என்றும் நாம் கூறிவந்திருக்கின்றோம். இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக வாய்த்திருக்கின்ற மாண்புமிகு திரு. வி. பி. சிங், அவர்கள் அண்மையில் கேரளத்தில் ஆற்றியிருக்கின்ற ஒரு உரை நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கின்ற வகையில் அமைந்த ஒரு ரையாகும். அவர்கள் சொன்னார்கள், நமது மாநிலங்களில் இருக்கின்ற அரசுகள், மத்தியிலே இருக்கின்ற அரசைப் பார்த்து யாசகம் கேட்கின்ற அரசுகளாக இருக்கக் கூடாது, நமக்குக் கிடைக்கின்ற ஒன்றை மாநில சகோதரர்களோடு