பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

209

ஐயப்பாடுகள் இவை எல்லாம் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. கொள்முதல் பற்றி நம்முடைய ஜனதா தளக் கட்சியினுடைய உறுப்பினர் நண்பர் திரு. பூவராகன் அவர்கள் பேசும்போது நுகர்பொருள் வழங்கு துறையைப் பொறுத்தவரையிலே கொள்முதலைச் சரியாகச் செய்யவில்லை என்கின்ற ஒரு செய்தியை இங்கே சொன்னார்கள். நான் அவருக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டில் நெல் கொள்முதல் பணி திறம்பட நடைபெற்று வருகிறது. 16.3.1990 வரை 9,57,711 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது சென்ற ஆண்டில் இதே நாளில் நாளில் 4207,19, மெட்ரிக் டன்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டது என்பதை நினைவுகூரும்போது, இது மிக அதிகமானது என்பதை து எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு பகுதிக்கும் பொது விநியோக முறையில் எவ்வளவு அரிசி தேவை என்பது ஏற்கெனவே கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்பத்தான் அரிசி முன்கூட்டியே அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 19 நவீன லைகைளை இயக்கி இயக்கி வருகிறது. இவற்றின் மொத்த அரவைத் திறன் 4.86 இலட்சம் மெட்ரிக் டன் நெல் ஆகும். இவை அன்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அரவை முகவர்களை அமர்த்தி அவர்கள் மூலமும் நெல் அரவை செய்யப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன ஆலைகளுக்குத் தேவைப்படும் நெல் போக மீதி நெல் அரவை முகவர்கள் மூலம் அரவை செய்யப்பட்டு அவை அரசு பொது வினியோகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் செய்யும்போது தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர், நெல்லின் தரம் குறித்து சான்று வழங்கிய பின்புதான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்த நெல் கிடங்கு வசதிகளுக்கு ஏற்பவும், அமர்த்தப்பட்ட லாரிகளுக்கு ஏற்பவும் வெவ்வேறு மாவட்டக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரிசி முகவர்களிடமிருந்து பெறப்படும் பெறப்படும் அரிசியின் தரமும் சரிபார்த்த பிறகுதான் வழங்கப்படுகிறது.

8- க.ச.உ. (நிஅ) ப-2