பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

211

மிகச் சன்னரக அரிசியின் அடக்க விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் ୧୦ 4.11. பொது வினியோகத்தில் வழங்கியபோது இதன் விலை ரூபாய் 2.50. இதனால் கிலோ ஒன்றுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 1.61. மொத்தம் வழங்கப்பட்ட மிகச் சன்ன ரக அரிசியின் அளவு 8.10 லட்சம் டன்கள். இதன் மூலமாக மட்டும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 130.65 கோடி ரூபாய். எனவே இந்த மூன்று ரக அரிசிக்கு - மோட்டா ரகம், சன்ன ரகம் மற்றும் மிகச் சன்ன ரகம் ஆகிய இந்த ரக அரிசியும் ஏறத்தாழ 20 லட்சம் டன்கள் வாங்கிய வகையில் அரசுக்கு இழப்பு வாங்கி குறைந்த விலைக்கு விற்ற வகையில் அரசு மானியமாகக் கொடுத்தது 338.88 கோடி ரூபாய். இந்தத் தொகையை அரசு மானியமாகத் தர வேண்டிய சூழ்நிலை. இப்போது இதிலேதான் கொஞ்சம் விலையை ஏற்றியிருக்கிறோம்.

அப்படிப் பார்த்தால்கூட மோட்டா ரக அரிசியின் அடக்க விலை ரூபாய் 3.73. விற்கப்படும் விலை இப்போது 2 ரூபாய். அரசுக்கு இதிலே கிலோ ஒன்றுக்கு இழப்பு ரூபாய் 1.73. 4.15 லட்சம் டன் அரிசி மூலமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 71.84 கோடி.

சன்ன ரக அரிசியின் அடக்க விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3.88. விற்கப்படும் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3.00. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, கிலோ ஒன்றுக்கு 88 பைசா. ஆக, 7.75 லட்சம் டன்னுக்கு ஏற்பட்ட இழப்பு 67 கோடியே 89 லட்சம் ரூபாய்.

மிகச் சன்ன ரக அரிசியின் அடக்க விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4.11. இப்போது விற்கப்படும் விலை ரூபாய் 3.50. இதனால் அரசுக்கு கிலோ ஒன்றுக்கு ஏற்பட்ட இழப்பு 61 பைசா. ஆக, 8.10 லட்சம் டன்னுக்கு அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 49 கோடியே 65 லட்சம் ரூபாய். ஆக, இந்த மூன்று ரக அரிசிக்கும் சேர்த்து அரசுக்கு இழப்பு ரூபாய் 189 கோடியே 38 லட்சம் ஆகிறது.

300 சொச்சம் கோடியிலிருந்து 180கோடி என்கிற அளவுக்கு அந்த மானியத் தொகை குறைந்து வந்திருக்கிறது. ஆனால் சத்துணவுக்காக வாங்கப்படும் அரிசிக்குத் தருகின்ற