பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

213

தாங்கிக்கொள்வார்கள், இல்லாவிட்டால் ஒரு பெரிய பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டத்திலே ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்துத்தான் இதைச் செய்கிறோம். ஆனால் ஒன்று, இன்னும் பத்து நாளிலோ, 20 நாளிலோ மத்திய அரசு மீண்டும் அரிசியின் விலையை ஏற்றக்கூடும். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மத்திய அரசு அப்படி ஏற்றுகிற நேரத்திலே நம்முடைய மாநில அரசு இந்த விலையைவிட அதிக விலையாக அந்த விலையை உயர்த்தாது என்ற உறுதியை மாத்திரம் என்னால் இப்போது அளிக்க முடியும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. எஸ். ஆர். இராதா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆந்திராவில் அரிசியின் விலை என்ன, அவர்கள் என்ன வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் என்பதையும் சொன்னால் உதவியாக இருக்கும்.

2

க்

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: ஏற்கெனவே பத்திரிகைகளிலே விளம்பரம் மூலமாகவே அரசு சொல்லி யிருக்கிறது. ஆந்திராவிலே 2 ரூபாய். எப்படி 2 ரூபாய் என்றால் யாருக்கு என்றால், 500 ரூபாய் மாத வருமானம் உள்ளவர்களுக்குத்தான். 501 ரூபாய் உள்ளவர்களுக்குக் கிடையாது. 2 ரூபாய் அங்கே அரிசி விலை. 500 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அந்த இரண்டு ரூபாய் அரிசி கிடையாது. வெளி மார்க்கெட்டில் 4 ரூபாய், 5 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். நான் நேரிலே அறிந்தது. அதைக்கூட மாற்றித்தான் ஆக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் கட்டுப்படியாகாது என்று இன்றைய முதலமைச்சர் திரு. சென்னா ரெட்டி அவர்கள் என்னிடம் பேசும்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதுதான் அங்குள்ள நிலைமை.

விவசாயிகளுடைய கடன்களைப் பற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை ஒட்டி இங்கேயும் நம்முடைய உறுப்பினர்கள் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறி இருக்கிறார்கள். மத்திய அரசு விவசாயிகளுடைய கடன் 10,000 ரூபாய்வரை என்பதற்குச் சில நிபந்தனைகளை எல்லாம் போட்டு, அது அவர்களாகவே விரும்பி வேண்டுமென்றேதராமல் இருக்கிற கடன்களுக்கு