பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

குழுவினை டெல்லிக்குச் சென்று சந்திக்கின்ற நேரத்தில் 845 கோடி ரூபாய்தான் நம்மால் பெற முடிகின்றது என்றால் அதற்குக் காரணம் நாம் முன்கூட்டியே செய்த தவறுதான் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பத்திரிகையாளரிடத்திலே பேசும் போதும் அல்லது இந்த அவையில் பேசுகின்ற நேரத்திலும் ஆயிரம் கோடி அல்லது 1200 கோடி ரூபாய் அளவுக்கு திட்டத்திற்கான ஒப்புதல் தேவை என்று நிதியமைச்சரோ மற்றவர்களோ ஆளும் கட்சி சார்பிலே எடுத்துக்கூறி இருப்பார்களேயானால் 845 கோடி ரூபாய் என்று ஒரு குறைந்த திட்ட ஒதுக்கீட்டிற்கான ஒப்புதலைப் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டுமல்ல, நிதிநிலை அறிக்கையிலே நாவலர் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார் 845 கோடிக்கு திட்டக்குழு ஒப்புதல் அளித்திருக்கின்றது என்றாலும் கூட செலவு 893 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று குறிப்பிடு கின்றார். இப்படி 893 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்ற நேரத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டிருந்தால்தான் நாம் 900 கோடியாவது பெற்றிருக்க இயலும். எனவேதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியபோது 800 கோடி ரூபாய் எங்களுக்குப் போதுமானது. எனவே அதைத்தான் கேட்பதாக இருக்கிறோம் என்று திருச்சியிலே நிதியமைச்சர் அவர்கள் கூறியது நமக்கு வரவேண்டிய ஒப்புதல் தொகைக்கு ஒரு இடையூறாக குறுக்கீடாக அமைந்துவிட்டதோ என்று ஐயுறுகிறேன்.

மாநிலங்களுக்கு மத்தியிலிருந்து தரப்படுகின்ற உதவியைப் பற்றி, அதாவது நபர்வாரியாகக் கணக்கீடு செய்து தரப்படுகின்ற அந்த உதவியைப் பற்றி மத்திய திட்ட அமைச்சர் மாண்புமிகு திரு எஸ்.பி.சவான் அவர்கள் பாராளுமன்றத்திலே ஒரு அறிக்கையைத் தரும்போது குறிப்பிடுகிறார். மாநிலங்களுக்கு நபர்வாரி உதவியைப் பொறுத்தவரையில் இராஜஸ்தானுக்கு ரூபாய் 60; உத்தரப்பிரதேசத்திற்கு ரூபாய் 48; மேற்கு வங்கத்திற்கு இந்த ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு