கலைஞரின் சட்டமன்ற உரைகள்
219
கேட்டுக்கொண்டதன் பேரில், வங்கிகள் உதவி செய்ய முன் வந்தார்கள்.
1974,75 இல் இது போன்ற ஒரு திட்டத்தை அன்றைக்கு இதே அரசு ஆரம்பித்து பல தடைகள் ஏற்பட்டு அது கைவிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 46 தனி நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 30 தனி நபர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். எனவே 76 பேர் 30.3.1990க்குள் பயன் அடைவார்கள் என்ற நல்ல செய்தியை நான் திரு. ஆல்போன்ஸ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். இரண்டு கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் ரூ.20 கோடியை ரூ.2 கோடி என்று சொல்லி யிருப்பார்கள் என்று கருதுகிறேன். நிதிநிலை அறிக்கையிலே ரூ.20 கோடிதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறுதொழில் தொடங்குவற்குத் தேவையான நிதி உதவி அளிக்க 20 கோடி ரூபாயில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தான் கடந்த ஆண்டு குறிப்பிட்டிருக்கிறோம். அதனுடைய நிலைமை என்னவென்றால், 1981-82 லேயிருந்து இந்தச் சிறப்பு உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சேர்ந்து இந்தத் திட்டத்தை நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து மத்திய அரசு அன்றைக்கிருந்து, 1981-82 லேயிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பழங்குடி மக்களுக்காக ஒரு தொகையை வழங்கி வருகிறது.
ய
ய
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அரசு வழங்கும் தொகையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென்பது நிபந்தனை. ஆனால் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய தொகை முழுமையாகச் செலவிடப்படாமல் மீதம் வைக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கும் தொகை முழுமையாக செலவிடப்படாமல் மீதம் வைக்கப்பட்டு ஒரு திரண்ட தொகையாக, அப்படி செலவிடப்படாமல் குவிந்த தொகையாக 1981-82ம் ஆண்டில் செலவிடப்படாத