பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை

லஞரின் சட்டமன்ற உரைகள்

நடைமுறைப்படுத்த

223

அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தொழிற்சாலைச் சட்டங்கள் செயல்படும் விதம், இந்தியாவிலே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் மிக நேர்த்தியாக இருக்கிறது என்று தொழிற்சாலை நடத்து கிறவர்களே கூட நம் மீது கொஞ்சம் வருத்தப்படுகிறார்கள். அந்த அளவிற்குத் தொழிற்சாலைச் சட்டங்களை இந்த அரசு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிக நேர்த்தியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அதிலும் இன்னும் குறைபாடு இருக்குமானால், திரு. ரமணியைப் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக் காட்டுவார்களேயானால் இந்தக் குறைகளைக் களைவதற்கு அரசு தயாராக இருக்கும் என்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வடலூர், சேஷசாயி இன்சுலேட்டர் தொழிற்சாலையைப் பற்றி இங்கே கூறப்பட்டது, "லே-ஆப் பற்றி. நண்பர் திரு.கோவிந்தராஜன் அவர்கள் இங்கே சில வினாக்களை எழுப்பி இருக்கிறார்கள். அது குறித்தும் ஆராய்ந்ததில் "லே- ஆப்' என்றால் பாதிச் சம்பளம் உண்டு என்றாலும் கூட, அந்த பாதிச் சம்பளத்திலே வேலை பார்க்கின்ற தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமும், ஐயமும் இருக்கின்ற காரணத்தால் இந்த "லே-ஆப்' 'புக்கான காரணங்கள் என்ன என்பதை இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும் என்று மாண்புமிகு உறுப்பினர்கள் வற்புறுத்தியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, மேலும் தீவிரமாக ஆராய்ந்து இந்த "லே-ஆப்" கொடுமையிலிருந்து தொழிலாளர்கள் விடுபட அரசு ஆவன செய்யும் என்ற உறுதியை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அவர்கள் கூடக் குறிப்பிட்டார்கள். சரக்கு வாகன வரியினால், பொருள்களுடைய விலை ஏறும் என்று அவர்களும் குறிப்பிட்டார்கள், மற்றவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சரக்கு வாகனங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆம்னி பஸ் பற்றி இணைத்துச் சொன்னார்கள். ஆம்னி பஸ்ஸுக்கு 2,000 ரூபாய் என்பது கர்நாடகத்திலே கூட போடப்பட்டு