கலைஞரின் சட்டமன்ற உரைகள்
247
மலிவு விலையில் மது கொடுக்கிறார்கள். ஆகவே இந்த ஆட்சி ஒழிய வேண்டும்; இந்த ஆட்சியை அகற்றுவதற்கு கொடி பிடிக்கவேண்டுமென்று சொல்கிறார்கள்.
ஒரு கட்சி பாண்டிச்சேரியிலே தேர்தலிலே நின்றது நின்றது என்று நான் சொல்லித்தான் உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தக் கட்சியினுடைய - பாட்டாளி மக்கள் கட்சி – தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா? எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது அந்தத் தேர்தல் அறிக்கை. “கள், சாராயக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் " தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். குறைந்த விலையில் கள், சாராயம் விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், இங்கே போராட்டம் என்றால், தி.மு.க. மீது உள்ள ஒரு அலர்ஜி; ஒரு வெறுப்பு; ஒரு எரிச்சல்; ஒரு கோபம் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்பதைத் தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மதுப் பழக்கத்தை நிறுத்துவது என்பதும், இதை அகற்றுவது என்பதும் ஒரு சமுதாயப் பிரச்சினை என்பதை மனதிலே கொள்ள வேண்டும். எனவே பிரச்சார இயக்கங்கள் இதற்கு முடுக்கிவிடப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இன்றைக்கு 'லோக குரு' சங்கராச்சாரியார்கூட மலிவு விலை மதுவை எதிர்த்துப் பேசியிருக்கிறார். அவர் தன்னை தமிழக அளவிற்குச் சுருக்கிக் கொண்டு பேசுகிறார் என்றால் தமிழ் நாட்டின் மீது மட்டும் அவருக்கு அவ்வளவு கவலை. உலகத்திற்குக் குருவாக இருக்கிற அவர், இருந்தாலும் உலகத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தமிழ் நாட்டைப் பற்றி மாத்திரம் கவலைப்படுகிறார் என்றால் அவரைப் போன்றவர்கள் எல்லாம் இந்தப் பிரச்சாரத்திற்கு ஆணி வேராக இருக்கவேண்டும். சேவா சங்கங்கள், மாதர் சங்கங்கள் இவர்களெல்லாம் கூட அரசோடு ஒத்துழைக்க வேண்டும். என்ன செலவானாலும் எந்த வகையிலே யானாலும் இந்த மது தீதானது என்பதை மக்களிடத்திலே பிரச்சாரம் செய்ய இந்த அரசு எவ்வளவும் செலவழிக்கத் தயாராக இருக்கிறது.
ம்