பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

255

மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தேதி 27.6.1989ல் நிறுத்தப்பட்ட கணக்குகள் எப்படி முடிவுபடுத்துவது என்று தெளிவான விவரங்கள் உள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது தொடக்கத்தில் இத்திட்டத்தில் அதிக நபர்களைச் சேர்க்க வேண்டுமென்று முயற்சிகள் எடுக்கப்பட்டது முன்பிருந்த ஆட்சியில். ஒரு குறியீட்டின் அடிப்படையில் பல கணக்குகள் ஏற்படுத்தப்பட்டன. இப்படிச் செய்ததில் மொத்தம் 16.6 இலட்சம் நபர்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் 31.12.1988ல், உள்ள கணக்குப்படி அந்த 16.6 இலட்சம் என்பது வெறும் 4.5 இலட்சம் நபர்கள் மாத்திரம் என்ற அளவுக்குக் குறுகிவிட்டது. எனவேதான் 16.6 இலட்சம் என்ற எண்ணை விட மிகக் குறைவான நபர்கள் இத்திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்பார்கள் என்பதை எண்ணிப் பார்த்தோம்.

10 ரூபாய் கட்டினால் அவர் இறந்து போனால், 5 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பதற்குப் பதிலாக, இந்த 10 ரூபாய் கூட கட்டாமல், இந்த அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்து சகல விதமான தொழிலாளர்களுக்கும் என்ற அளவில், அன்றைக்குக் கூட நம்முடைய வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். வேறு சில தொழிலாளர்களைப் பற்றிகூட அன்றைக்கு இணைத்துச் சொல்லியிருக்கிறார். அப்படி எல்லா தொழிலாளர்களுக்கும், இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதம் அவர்கள் 10 ரூபாய் தரவேண்டும். அதை ஈட்டுறுதியாக அவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் அல்லது 4 ஆயிரம் என்று வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி, விபத்திலே அவர்கள் மாண்டு விடுவார்களேயானால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்றும், குடும்பத் தலைவரை இழந்து வாடும் வறிய குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் தரப்படும் என்று இந்த அரசு அறிவித்திருக்கிறது. பழைய பாக்கித் தொகை 11 கோடி ரூபாய் அளவுக்குத் திருப்பித் தரப்பட வேண்டியிருக்கிறது. அதற்கான ஆணை பிறப்பிக்கப்படவிருக்கிறது

வெகு விரைவிலே அந்த 11 கோடி ரூபாய் அந்தப் பணம் கொடுத்தவர்களுக் கெல்லாம் திருப்பித் தரப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத் தலைவர் இறந்தால் 2,000 ரூபாய் நிதி வழங்குகின்ற புதிய