பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

265

கருத்துக்களையும், தோழமைக் கட்சிகளின் சார்பாக ஆதரித்துத் தந்த கருத்துக்களையும் நம்முடைய ரமணி அவர்கள், நம்முடைய பாண்டியன் அவர்கள், நம்முடைய தீட்சிதர் அவர்கள், லத்தீப் அவர்கள், அழகர்சாமி அவர்கள், வல்லரசு அவர்கள் ஆகிய அத்தனை கட்சிக்காரர்களும் தந்துள்ள ஆதரவுகளுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நீண்ட நேரம் நான் தந்துள்ள கருத்துக்களில் உங்களுக்கு ஒப்புதல் இருந்தாலும் ஒப்புதல் இல்லாவிட்டாலும் கூட இந்த அரசினுடைய முயற்சிகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் நடைபெறும் என்கின்ற அந்த நம்பிக்கையோடு இந்தப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க அந்த நம்பிக்கையோடு இந்தப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டு, இந்த அளவில் அமைகின்றேன். நன்றி, வணக்கம்.

திரு.உ.ரா. வரதராசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆண்டு மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடைய மணிவிழா

ஆண்டு

என்று குறிப்பிட்டு, குறிப்பிட்டு, அந்தத் கவிஞனுக்குப் பட்டுக்கோட்டையிலே ஒரு கலையரங்கம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் நான் எழுப்பியிருந்தேன் அதற்கும் மாண்புமிகு முதலமைச்சரவர்கள் ஒரு நல்லதொரு முடிவை இங்கே அறிவிப்பார்கள் என்று வேண்டி அமைகின்றேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மணிவிழா என்று சொன்னார்கள். பொதுவாக, மறைந்துவிட்டவர்களுக்கு அதற்குப்பிறகு நூற்றாண்டு விழா தான் கொண்டாடுவது வழக்கம். அவர்கள் அவர்கள் உயிரோடு உயிரோடு இருக்கும்பொழுதுதான் மணிவிழா, வைரவிழா இதெல்லாம் எடுப்பது வழக்கம். மறைந்து விட்டவர்களுக்கு வேண்டுமானால், 60ஆவது ஆண்டு நினைவு நாள் என்று கொண்டாடலாம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மீது வரதராசன் அவர்களுக்குள்ள அதே அன்பு எனக்கும் உண்டு.

இன்னும் சொல்லப் போனால், இளம் வயதில், என்னுடைய கூட்டங்களில் மேடைகளிலேயிருந்து பாடிய இளைஞன் அந்தப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். எப்படி நினைவுச் சின்னம் அமைக்கலாம் என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுக்கலாம்.