பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

நிதிநிலை அறிக்கை மீது

இந்த ஆண்டு, அது மாத்திரமல்ல, டாக்டர் தருமாம்பாள் அம்மையாருடைய நூற்றாண்டு விழா, சுவாமி சகஜானந்தா அவர்களுடைய நூற்றாண்டு விழா, இவைகளெல்லாம் வருகின்றன. அவைகளையெல்லாம் நடத்தவும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.எஸ்.ஆர். இராதா: மாண்புமிகு தலைவரவர்களே, இரண்டு மூன்று பிரச்சனைகள் என்ற அளவிற்கு நான் எழுப்ப வேண்டுமென்று நினைத்தேன். நேரத்தைக் கருதி, முன்னாலே எழுப்பிய பிரச்சனைகளுக்கு முதல்வரவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அளவிற்கு ஒரு பதிலைச் சொல்லிவிட்டார்கள்.

அதிலே ஒன்று ஒன்று, அரிசி விலையைக் குறைக்க வேண்டுமென்று சொன்னதற்கு அவர்கள் கணக்கைக் காட்டி, ஏறிய அரிசி விலை ஏறியதுதான் என்று சொல்லிவிட்டார்கள்.

அதேபோல, மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்திச் சொன்னதற்கும் அவர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். அந்த பதிலில் எங்களுக்கு மன நிறைவு இல்லை என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதேபோல், எங்களுடைய பொதுச் செயலாளர் தாக்கப்பட்டது இன்றைக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கு நீதி விசாரணை வேண்டுமென்று பல முறை கேட்டிருக்கிறோம். அதற்கும் முதல்வரவர்கள் தன்னுடைய பதிலைச் சொல்ல வேண்டுமென்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அதற்கு நீதி விசாரணை வேண்டுமென்று உங்களுடைய பொதுச் ச் செயலாளர் அரசுக்குக் கடிதம் எழுதுவாரேயானால் அது பற்றி அரசு பரிசீலிக்கும்.