பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

நிதிநிலை அறிக்கை மீது

உற்பத்தி எவ்வளவு? நான் 1971ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் உள்ள நிதிநிலை அறிக்கைகள் அத்தனையையும் இங்கே கைவசம் வைத்திருக்கிறேன், சந்தேகம் ஏற்பட்டால் சான்று காட்டுவதற்காக. அதன்படி 1970-71இல் கழக ஆட்சியிலே உணவு உற்பத்தி எவ்வளவு என்று நிதிநிலை அறிக்கையிலே அன்றைக்கு சுட்டிக்காட்டப்பட்டது 70 லட்சம் டன். அந்த 70 லட்சம் டன்னிலேதான் 50 ஆயிரம் டன் மத்திய தொகுப்புக்கு தரப்பட்டது. முதலமைச்சர் குறிப்பிட்டபடி 1972-73ல் ஒரு லட்சத்து 11 ஆயிரம் டன் தரப்பட்டபோது தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தஞ்சை, தென்னாற்காடு போன்ற பல மாவட்டங்களில் கழனிகள் எல்லாம் கரைபுரண்டு வந்த ஆற்று வெள்ளத்தால் மண் மேடிட்டு, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு அந்த மண்மேடுகளை எல்லாம் கரைத்து, வெட்டியெடுத்து மீண்டும் வயல்களை காணவேண்டிய ஒரு பயங்கரமான சூழ்நிலை. அந்த சூழ்நிலையில் கூட 1972-73ல் முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல 1 லட்சத்து 11ஆயிரம் டன் அரிசியை கழக அரசு மத்திய தொகுப்பிற்கு தந்துள்ளது, 1975-76 வறட்சி காலம், அப்போது இந்த அவையிலே நிதிநிலை அறிக்கையை படித்த நான் இப்படியே சொல்லியிருக்கிறேன், வறட்சி துயர் தணிப்புப் பணிகளுக்காக திட்டத்திற்கு அப்பால் மேலும் 20 கோடி ரூபாய், 1975-76 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நான் குறிப்பிட்டதிலேயிருந்து அது வறட்சி காலம் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். நாடும் அறியும். ஆனால் அந்த வறட்சி காலத்திலே முதலமைச்சர் மேலவையிலே குறிப்பிட்டதைப் போல 1975, 1976ல், 2 லட்சத்து 93ஆயிரம் டன் தமிழக அரசு மத்திய தொகுப்பிற்கு ஒதுக்கியிருக்கிறது. 1979ல் அன்றுள்ள அரசு, கொடுத்ததை ஏற்றுக் கொள்ளவில்லை; தாமதம் காட்டினார்கள் என்று சொல்லப்பட்டாலும்கூட, 1978ல் கொடுத்தார்களா என்றால் இல்லை. 1978லே உணவு உற்பத்தி குறைவா என்றால் கிடையாது. 1978ம் ஆண்டு 74 லட்சம் டன் உணவு உற்பத்தி என்று நிதிநிலை அறிக்கையிலே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. 1970-71லே 70 லட்சம் டன் உற்பத்தி