கலைஞரின் சட்டமன்ற உரைகள்
275
infrastructure and agriculture is fully in keeping with the Chief Minister's vision. The simplification of sales tax collection procedures is a token of the Chief Minister's refreshing attitude which governs an impatience with the proliferation of forms and certificates.
The marked orientation of the Budget in favour of industrial growth and expansion is clear by the many concessions that it offers. No Budget of Tamil Nadu, especially those of Dr. Karunanidhi, has been complete without concessions to Government servants. Most of them are long overdue and legitimate. Particularly, the Chief Minister has done well to simplify the Pension Rules. The Budget has taken important initiatives to renovate Tamil Nadu's irrigation systems and for better exploitation of water resources.
To conclude, it was, for me, almost a sentimental journey to go through it, another Budget deftly drafted by the Kalaignar, a Budget of promise and hope for the State. I hope this promise and vision will be translated into reality in a succession of Budgets from the same able hands" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த அறிக்கையைப் பற்றி Madras Chamber of Commerce, Confederation of Indian industries, Southern India Chamber of Commerce, Guindy Industrial Estate Manufacturers Association, Indian Chamber of Commerce and Industries, Coimbatore, Coimbatore Stock Exchange போன்ற சேம்பர்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகளுடைய சங்கங்கள், ஏழை, எளிய மக்களின் சார்பாக வழங்கப்பட்ட பாராட்டுக் குரல்கள், அரசு ஊழியர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்ட நன்றியுணர்வுச் செய்திகள் இத்தனையையும் ஏடுகளிலே நீங்களும் கண்டிருக்கிறீர்கள். இந்த இந்த வரவு- செலவுத் திட்டத்தில் நம்முடைய மாண்புமிகு திருநாவுக்கரசு அவர்கள் சில புள்ளிவிவரங்களை நேற்றையதினம் எடுத்துக்காட்டி - நான் இடைமறித்து சிலவற்றைச் சொன்னாலும்கூட, முழுமையாகச் சொல்ல இயலவில்லை - இவை எல்லாம் குறைந்திருக்கிறது பொதுவான பணிகள், சமூகப் பணி, பொருளாதாரப் பணி இதில் ஏன் இந்த வித்தியாசம் என்றெல்லாம் எடுத்துக் காட்டினார். Economic Service அதாவது பொருளாதாரப் பணி