கலைஞரின் சட்டமன்ற உரைகள்
281
பிரச்சினைகளையும், நண்பர் திரு. சுதர்சனம் உட்பட இங்கே ஆரம்பித்து, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முடித்தவரையிலே உள்ள அத்தனை தொகுதி கோரிக்கை களையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை நிச்சயமாக நான் மேற்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் அறிக்கையை இங்கே எடுத்துக்காட்டிப் பேசிய திருநாவுக்கரசு அவர்கள், 'அதையெல்லாம் எப்போது செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தேர்தல் அறிக்கை இந்த நடப்பு ஆண்டு காலத்திற்கு மாத்திரம் வெளியிடப்பட்டது அல்ல. எங்களுடைய ஐந்து ஆண்டுக்கால ஆட்சிக்கால வெளியிடப்பட்டது தேர்தல் அறிக்கை. எனவே, அவற்றையெல்லாம் ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்று வோம். திருநாவுக்கரசு அவர்கள் எங்களோடு இருந்து, அதனை நிறைவேற்றுவதற்காக இப்படி ஆக்கப்பூர்வமான யோசனைகளையெல்லாம் சொல்லவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
ஊழலை ஒழிக்க, நிர்வாகச் சீர்திருத்தம் பெற, ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையிலே தெரிவித்திருந்தேன். அந்த வாசகம், 'தமிழ்நாட்டில் அரசுத் துறைகளிலும், அரசு நிறுவனங்களிலும் ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறாமல் தூய்மையான, சிறந்த நிர்வாகத்தை அமல்படுத்துவதற்கும், தற்போதுள்ள நிர்வாக அமைப்பில் சில மாற்றங்களைச் செய்வதற்குமான வழிமுறைகளை ஆய்வு செய்து, அரசுக்குத் தேவையான சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்' என்று தெரிவித்திருந்தேன். அந்தக் குழுவை உங்கள் முன்னால் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். அதற் கேற்ப, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராமானுஜம் அவர்களைத் தலைவராகவும், செல்வி எம்.எஸ். ரமேஷ், ஐ.ஏ.எஸ். அவர்கள், ஓய்வு பெற்றவர், ஓய்வு பெற்ற திரு. சி. தங்கராஜ், ஐ.ஏ.எஸ். அவர்கள், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். திரு. சி.வி. நரசிம்மன் அவர்கள், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்கள், முன்னாள் மேலவை உறுப்பினரும், ஆற்காடு குடும்பத்தைச் சேர்ந்தவருமான இந்த ஆற்காடு அல்ல, அந்த ஆற்காடு
-