கலைஞரின் சட்டமன்ற உரைகள்
காண
287
நீண்டகால அடிப்படையிலே வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறியதற்கிணங்க இத்திட்டத்தில், சமூகத்தில் அவர்களுடைய நிலையை உயர்த்தி மகளிருக்கு சமூக மேம்பாட்டினையும் அளிக்கும் ஒருங்கிணந்த ஊரக வளர்ச்சித் திட்டம், கிராமப்புறங்களில் வாழும் மகளிர் சிறார்க்கான முன்னேற்றத் திட்டம், இந்திரா மகளிர் திட்டம், பிரதம அமைச்சரின் வேலை வாய்ப்புத் திட்டம், வறட்சிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு உள்ளடக்கத் திட்டம் என்பன உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத் திட்டங்கள் எல்லாவற்றிலுமே மகளிருக்கும், மகளிர் குழுக்களுக்கும் வருவாய் பெருகத்தக்க வகையில் உதவி அளிக்கும் அம்சங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இத்திட்டங்கள் பல்வேறு துறைகளினால் செயல்படுத்தப்படுவதால் கிராமப்புறப் பெண்களின் பிரச்சினை களுக்கு முழுவதுமாகத் தீர்வு முடியவில்லை. உதாரணத்திற்கு இத்திட்டங்களால் பெண்களைப் பயனாளி யாக்கப் பார்க்கிறோமே தவிர, சமூகத்தில் அவர்களுடைய நிலையை உயர்த்துவதற்கோ, அவர்களுடைய திறனை அதிகப்படுத்துவதற்கோ திட்டங்களில் வழியில்லை. இத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் மகளிர்க்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு உள்ளதா, அவர்களுடைய வருவாய் உயர்ந்துள்ளதா என்பதும் இத்திட்டங்களின் மூலம் தொடர்ந்து கவனிக்கப் படவில்லை. பெரும்பான்மையான திட்டங்கள், எண்ணிக்கை அளவை அடைவதிலேயே குறியாக இருக்கின்றனவே தவிர, சத்துணவு, குடும்ப நலன், சுகாதாரம் போன்ற பொதுப் பிரச்சினைகளைத் தொடுவதே இல்லை. மிகவும் முக்கியமாக, 1989ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய திட்டத்தின் வெற்றிக்கு அடிப்படையான பயனாளிகளினுடைய பங்கேற்பு பெரும்பான்மையான திட்டங்களில் இப்பொழுது இல்லை.
நாங்கள் அறிவித்துள்ள புதுத் திட்டம், ஏற்கெனவே செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் நன்மைகளைத் தொகுத்து பெண்களின் நலனுக்காக சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமாக அமையும். அதன்படி கிராமப்புற ஏழை மகளிர்