பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

நிதிநிலை அறிக்கை மீது

திருக்குறளில் எத்தனையோ குறள் இருக்க, இந்தக் குறளைக் கையாண்டு இந்த எருதை சரியான பாதையில் நடத்திச் செல்ல நீங்கள் எல்லாம் உங்களுடைய கருத்துக்கள் எல்லாம் தார்க்குச்சிகளாகப் பயன்படவேண்டும். மூக்கணாங் கயிறாக இருக்கவேண்டும் என்ற அளவிலேதான் இந்தக் குறளை நான் கடந்த நிதிநிலை அறிக்கையிலே இறுதிப் பகுதியிலேயும், இந்த

நிதிநிலை அறிக்கையிலே முதல் பகுதியிலேயும்

ணைத்திருக்கிறேன் என்பதை மெத்தப் பணிவன்போடு ங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்பு இங்கே உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் திரு. பழனிச்சாமி அவர்கள், கொள்கைக் குறிப்பு ஏடாக முதலிலே பல பக்கங்கள் இதிலே புரளுகின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு, பாராட்டி வரவேற்றுப் பேசி இருக்கிறார்கள். அவர் எதைக் குறிப்பிட்டார் என்பதை அவரே விளக்கியிருக்கிறார். மத்திய, மாநில அதிகாரங்கள் என்ற தலைப்பில், மத்தியிலே குவிந்து கிடக்கின்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை, இன்று நேற்றல்ல, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய காலத்திலிருந்து திராவிட முன்னேற்னற்றக் கழகம்,

எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியில்

இருந்தாலும் சரி, வலியுறுத்தி வருகிறது என்பதை அவை உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள். அதற்கேற்பத்தான், இந்த நிதிநிலை அறிக்கையிலே அந்தப் பகுதிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. முன்பு இருந்த மத்திய அரசு கேளாக் காதாக இந்தப் பிரச்சினையிலே இருந்தாலும் கூட, இன்றுள்ள மத்திய அரசு ஓரளவு கையை செவியிலே வைத்து கொண்டாவது என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்கின்ற அரசாகவாவது இருக்கின்றது என்ற ஆறுதலை நாம் பெற முடிகிறது. அதற்கேற்ப சில உதாரணங்களைக் கூட இந்த அறிக்கையின் முகப்பிலே நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள், இந்த அரசின் நிதிநிலை அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள திட்டங்களையெல்லாம் வெகுவாகப் பாராட்டி இருக்கின்றார்கள். அவர்களுடைய பாராட்டினைப் போலவே அவர்களுடைய