பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

305

மாறுதல் அடைந்து வருகின்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் நாம் பின்தங்கிவிடாமல் இருப்பதற்கும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு ஏற்ற தகவல் தொழில் நுட்பத் துறையிலே உலகத்தில் முன்னோடியாக விளங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத்தான் இந்தத் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம், 10 கோடி ரூபாய் இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட இருக்கிறது. இதிலே அரசும், இந்தியாவிலே உள்ள தனியார் தொழில் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து உலகளவில் இந்தத் துறையிலே சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் உதவியோடு தொழில் நுட்பத்திலே வணிகம் பற்றிய செயல்பாடு, நாளும் மாறிக்கொண்டு வரும் தகவல் தொழில் நுட்பத்தில் புதிய முறைகள், புதுமையானதும், காலத்தின் மாற்றத்திற்கு ஒட்டிப்போகும் பாடமுறைகளைக் கொண்ட பட்டப்படிப்பினையும் உருவாக்கும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப நேற்று இருந்த விஞ்ஞானப் புதுமை இன்றைக்கு மாற்றப்பெற்று விடுகின்றது. அவ்வளவு வேகமாக, ஆனால் நல்ல வழியிலே விஞ்ஞான வழியிலே பயணம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த உலகத்தினுடைய தொலைவேகூட நான் அறிக்கையிலே குறிப்பிட்டதைப்போல மிக வேகமாகச் சுருங்கிக் கொண்டிருக்கிறது. குளோபல் வில்லேஜ் என்கின்ற அளவிற்கு நம்முடைய கிராமப் பகுதிகள் எதிர்காலத்திலே வரவிருக்கின்றன. உலகத்திலேயே தகவல் துறை தொழில் நுட்பத்தின் மூலம் அன்றாடம் புதுமைகளைத் தோற்றுவித்த நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் திறமை படைத்த 'பில்கேட்ஸ்' என்பவர் அண்மையிலே இந்தியாவிற்கு வந்திருந்தார். உங்களுக் கெல்லாம் தெரியும். அவருக்கு இந்தியாவிலே எத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்றாகும் அது அவருக்காகத் தரப்பட்ட வரவேற்பு என்று சொல்லமாட்டேன். தகவல் துறை தொழில் நுட்பத்திற்காகத் தரப்பட்ட வரவேற்பு வரவேற்பு என்று நான் சொன்னால்தான் அது பொருத்தமாக இருக்கும். தகவல் தொழில் நுட்பத்தில் நமது தமிழகமும் முன்னேறத் தவறிவிடக்கூடாது. வேகமாக இந்தியாவிலே உள்ள பல பகுதிகள் முன்னேறத் தொடங்குகிற நேரத்தில் நாமும்

11 - க.சஉ (நிஅ) ப-2