கலைஞரின் சட்டமன்ற உரைகள்
307
திட்டம் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இங்கே தொடங்கப்பட இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறேன். பெண்களுக்கு தொழில் முனையும் திறன் அளித்தல், அவர்களுக்குத் தேவையான நிர்வாகம் மற்றும் தொழில் நுணுக்கப் பயிற்சிகளை அளித்தல், அவர்கள் தொழில் தொடங்கவும், உற்பத்தி செய்த பொருட்களை வாணிபம் செய்யவும் தேவையான உதவிகளை அளித்தல் போன்ற கூறுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும். இந்த ஆண்டு இந்தியாவிலே 9 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 5 ஆயிரம் பெண்கள் பயன்பெறும் வகையில் 3 ஆண்டுகளில் செயற்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
சென்னையில் முதல் கட்டமாக உணவு பதப்படுத்தல், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கும் வகையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்தத் திட்டம் செயற் படுத்தப்பட இருக்கிறது
மாண்புமிகு உறுப்பினர்கள் எல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதுபோல இது மட்டும் அல்லாமல் மகளிருக்கு என்று- 5 ஆண்டுகளில் 10 லட்சம் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இந்த ஆண்டு முதல்கட்டமாக 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது 1 லட்சம் பெண்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம் என்ற தலைப்பில் வேலை வாய்ப்புக்கு 1997-98ஆம் ஆண்டில் தொடங்கப்பட இருக்கிறது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
சுய
சுகாதாரம், சத்துணவு, குடும்ப நலம், வேலைவாய்ப்பு, அறிவொளி, வாழ்க்கைக் கல்வி பற்றிய பயிற்சிகள் தர 50 சத்துணவுக் கூடங்களில் முதல் கட்டமாக மகளிர் நல மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
250 பேர் குடும்பத்திலே முதல் தலைமுறையாக பெண்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணி தொழில் முனைவோர்களாக வர விரும்பினால் 50 ஆயிரம் ரூபாய் வரம்புக்குள் 10 சதவீதம் அரசு மானியமாக வழங்கத்