பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

நிதிநிலை அறிக்கை மீது

பிறகு ஒரு டெண்டர் போட்டபொழுது, வேறு சிலர் குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டாலும்கூட அவர்களுக்கு டெண்டர் தரப்படாமல் அதே “கரன் சந்த் தாப்பா" என்ற இந்தக் கம்பெனியை அழைத்து அவர்களை குறைத்துக் கொள்ளச் சொல்லி ஐந்தாண்டுக் காலமாக எந்த அளவு டெண்டர் அவர்கள் போட்டு வாங்கிக் கொண்டிருந்தார்களோ அதை அவர்கள் குறைத்துக் கொண்டு, அவர்களுக்கு மறுபடியும் தரப்பட்டிருப்ப தாகக் கேள்விப்படுகிறேன். அப்படித் தரப்பட்டிருந்தால் இந்த ஐந்தாண்டுக் காலமாக நாம் அதிகமாகக் கொடுத்தது வீண் நஷ்டம்தானே, இழப்புதானே என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

இதை அவையிலே நான் முதலில் குறிப்பிட்டதைப் போல 27.1.83ல் வைக்கப்பட்ட, Comptroller and Auditor General of India தந்த அறிக்கையில் 1980-81ஆம் ஆண்டுக்கான நிலவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த ஆண்டுக்கான அறிக்கைகள் பிறகு வெளிவரக்கூடும். 1980-81இல் மட்டும் எவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் இருந்தன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Against the normal of 35 to 45 days for erection, more than 6 months were taken for erection in a large number of cases; in a few cases, the delay in erection was 1 to 4 years resulting in locking up of large funds for longer periods.

அதாவது 35 முதல் 45 நாட்களுக்குள் நடைபெற்று முடியவேண்டிய பவர் டிரான்ஸ்ஃபார்மர் நிறுவுகிற பல வேலை ஆறு மாதங்களுக்கும் மேலும் சிலவற்றில் ஓராண்டு முதல் நான்காண்டு வரையிலும் நடைபெற்று நடைபெற்று நீண்ட நாட்களுக்கு அதிகமாக பணம் முடங்கப்பட காரணமாக இருந்திருக்கிறது என்று Comptroller and Auditor - General of India அறிக்கை குற்றம் சாட்டுகிறது

-

Thirty-eight transformers of small capacity with an aggregate capacity of 37.25 MVA were lying idle.

38 டிரான்ஸ்ஃபார்மர்கள் வேலையில்லாமல் தூங்கிக் கிடக்கின்றன.