பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

நிதிநிலை அறிக்கை மீது

பேருந்து இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் இந்த அவையிலே சட்டத்தை இயற்றி கிராமங்களுக்கும் பேருந்துகள் செல்லக்கூடிய நிலையை உருவாக்கினோம். அடைக்கப்பட்ட வழியைத் திறந்துவிட்டோம்.

இன்னும்கூட கிராமங்களில், அதிலும் குறிப்பாக குக்கிராமம், பட்டிதொட்டி இவைகளில் வேன்கள் போகின்றன. இங்கே மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிவித்ததைப்போல, மணி அவர்கள் தெரிவித்ததைப்போல, கன்னியாகுமரியில் அப்படி வேன்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எனக்கு இந்த நினைவு எப்படி வந்தது என்றால், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நான் போட்டியிட்டபோது, அது மூன்று பிர்க்காக்களைக் கொண்டது. குளித்தலை, அதைப்போல பக்கத்திலே உள்ள மாயனூர், அதைப் போல கரூர் பக்கத்திலே உள்ள வெள்ளியணை இந்த மூன்று பிர்க்காக்களைக் கொண்டது குளித்தலைத் தொகுதி. அப்போது, 50 மைல்கள் நீளம்; திருச்சியிலேயிருந்து 10வது மைல் தொடங்கி கரூரிலே 1வது, 2வது வார்டுகூட குளித்தலை தொகுதி. அந்த வெள்ளியணைப் பகுதியில் நான் வாக்கு கேட்கச் சென்றபோது, குக்கிராமம், பட்டிதொட்டி - அங்கே சில பேர் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். மகாத்மா காந்தி உயிரோடு இருக்கிறாரா என்று. எப்போது 1957ஆம் ஆண்டு. எப்படி இருக்கிறார்; இப்போது வந்து போவாரா என்று கூடக் கேட்டார்கள். அவ்வளவு மோசமான நிலைமைக்கு, அறிவு கொடுக்கப்படாத கிராமங்கள் அந்தப் குதியில் இருந்தன. அங்கே எல்லாம் காலை உணவு கிடையாது. வாத்து முட்டைதான். வாத்து முட்டையைத்தான் கடைகளிலே அடுக்கி வைத்திருப்பார்கள். பெரிது பெரிதாக இட்டிலி போல இருக்கும். அதை வாங்கித்தான் காலை உணவாகச் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட குக்கிராமங்களிலே கூட வேன்களில் 10 பேர் தாராளமாக அமரக்கூடிய வேன்களில் - 50 பேர் பேர் 60 பேர், இருக்கைகளிலும் இருப்பார்கள்; ஓரத்திலும் தொத்திக் கொண்டும் இருப்பார்கள். அதனுடைய கூரையிலும் உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள். மண்ணை வாரித் தூற்றிக் கொண்டு மிகக் குறுகலான ஆற்று