பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

351

150க்கு மேற்பட்ட பொருட்களுக்கு விற்பனை வரிச் சலுகையும், 30க்கு மேற்பட்ட பொருட்களுக்கு விற்பனை வரி ரத்தும் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ரூ.440 கோடிக்கு வரி போடப்பட்டதாக திருநாவுக்கரசு சொன்னார்கள். இல்லை ரூ. 440 கோடிக்கு வரி போடவில்லை. ரூ.210 கோடிக்குத்தான் - அதுவும் மதுபானங்கள் மூலமாகவும், பான் மசாலா, பரிசுச் சீட்டு போன்ற பொதுமக்களைப் பாதிக்காத அளவில்தான் இந்த வரி போடப்பட்டிருக்கிறது. சில போக்குவரத்து வாகனங்கள், இரு சக்கர வண்டிகள் மீது வரி போடப்பட்டிருக் கிறது.

ரு

சைக்கிள் வரியைப் பற்றி ஆரூண் இங்கே பேசினார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் கட்டம் கட்டி இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதம் வெளிவந்திருக்கிறது. அவருடைய வாதமே, திரு. திருநாவுக்கரசு அவர்கள் சொன்ன வாதமும் அதுதான் வெளி மாநில அட்லஸ் போன்ற சைக்கிள் விலை குறைவாக இருக்கிறது; நம்முடைய மாநிலத்திலே டி.ஐ. சைக்கிளுடைய விலை அதிகமாக இருப்பதால் 4 சதவீத சைக்கிள் வரி குறைக்கப்பட வேண்டுமென்று சொன்னார்கள். நான் அதை சைக்கிள் எடுத்துப் பார்த்தேன். டி.ஐ ரூ. 1383க்கு விற்கிறார்கள். ஹீரோ சைக்கிள் ரூ. 1228க்கு விற்கப்படுகிறது. 'ஃபிரைட் காஸ்ட்' இவர்களுக்கு ரூ. 31 ஆகிறது. ஹீரோவிற்கு ரூ. 6 ஆகிறது. 'மேன்பவர் காஸ்ட்' டி.ஐ. சைக்கிளுக்கு ரூ. 95 ஆகிறது. ஹீரோவிற்கு ரூ. 44 ஆகிறது. அடிஷனல் சேல்ஸ் டாக்ஸ் டி.ஐ. சைக்கிளுக்கு ரூ. 40 ஹீரோ சைக்கிளுக்குக் கிடையாது.

G

Manufacturing fixed expenses and variable overheads 4.8. சைக்கிளுக்கு 127 ரூபாய். ரூ. 88 ஹீரோவிற்கு. ஆகவே மொத்தம் டி.ஐ. சைக்கிளுக்கு ரூ. 293. ரூ.138தான் ஹீரோ சைக்கிளுக்கு. எனவேதான் இந்த வரியைக் குறைக்க வேண்டு மென்று கேட்கிறார்கள். அதிலே இங்கே ஒரு நிபந்தனையோடு நான் குறைக்க விரும்புகிறேன். என்ன நிபந்தனை என்றால், ரூ.1383 விலையுள்ள சைக்கிளுக்கு ரூ. 40 வரி கட்டுகிறார்கள். அந்த வரியைக் குறைத்து, அதை வாங்குகிறவர்களுக்குக்