பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

நிதிநிலை அறிக்கை மீது

குறைத்துக் கொடுப்பார்களேயானால், அந்த ரூ. 40 குறைக்கப் படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். முடியாது என்றால் முடியாது. ஏனென்றால் ஒரு வரியைக் குறைத்தால், அந்த வரியின் அளவிற்கு விலையைக் குறைக்க வேண்டும். ஏனென்றால் இப்போதும் அவர்களுக்கு லாபம் இருக்கிறது

திரு. ஆர். சொக்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்கள் கேட்கக்கூடிய கேள்வி முழுக்க, முழுக்க நியாயமானது. அவர்களுக்கு 40 ரூபாய்க்கு வரிச் சலுகை கொடுத்தால், அவர்கள் 40 ரூபாய் சைக்கிள் விலையைக் குறைக்க வேண்டும். குறைத்தால் மட்டும் சலுகை கொடுங்கள், இல்லையென்றால் கொடுக்க வேண்டாம். எழுத்துப்பூர்வமாக அவர்கள் எழுதிக் கொடுக்கட்டும். அவர்கள் குறைக்கின்றார்கள் என்று சொன்னால், அந்தச் சலுகையைக் கொடுங்கள், இல்லையென்றால் வேண்டாம்.

6

திரு. ஜே.எம். ஆரூண் ரஷீத்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏழைகளின் வாகனமான சைக்கிளுக்கு வரியைக் குறைப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். பாட்டாளி மக்களின் சார்பிலே அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (சிரிப்பு) ஏழைகளின் சார்பிலே, தமிழ் மாநிலக் காங்கிரசின் சார்பிலே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அடிஷனல் சேல்ஸ் டாக்ஸ் குறைப்பதன் மூலமாக, நிச்சயமாக தமிழ் மாநிலத்தில் உற்பத்தியாகின்ற சைக்கிள்களுக்கு அகில இந்திய அளவில் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. நம்முடைய தமிழ்நாட்டிலே தொழில்கள் வளர இரு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறி, 40 ரூபாய் குறைப்பதற்கு நன்றி கூறி அமர்கின்றேன், நன்றி வணக்கம்.

திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வியாபாரிகளுக்கு எது எதற்கெல்லாம் வரியைக் குறைத்து இருக்கிறீர்களோ, அவர்களும் அதுமாதிரி விலையைக் குறைத்து விற்கிற மாதிரி ஏற்பாடு பண்ணுவீர்களா?

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் வரி குறைக்கப் படுகிறது.