பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

363

அரசு அலுவலகங்களிலே பொதுமக்களுக்கு உதவி செய்யும் தகவல் வழங்குகின்ற மையங்கள்; 10 புதிய வட்டங்கள் இந்த ஆண்டில் ஏற்படுத்தப்படும் என்ற செய்தி; இது மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய செய்தியாக அமைந்திருக்கிறது. அவைகளும் உரிய நேரத்திலே, உரிய முறையிலே கவனிக்கப்படும் என்ற அறிவிப்போடு இதைத் தெரிவிக்கின்றேன்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்த ஆண்டு 75 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு; நமக்கு நாமே திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு; சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 25 இலட்சம் என்பது ரூபாய் 30 லட்சமாக உயர்வு; உயர்வு; அதிகம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேசப் பேசத்தான், முடியாதா என்பதைச் சிந்தித்துச் சொல்ல இயலும்.

முடியுமா

வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் 385 வளர்ச்சி வட்டாரங்களுக்கு விரிவாக்கம்; குடிநீர்த் திட்டங்கள் பல கோடி ரூபாய்ச் செலவிலே, பல இடங்களிலே நிறைவேற்றப் படுகின்ற நிலையையொட்டி, குறிப்பாக குறிப்பாக, சிறப்பாக, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடையநல்லூர் பகுதிக்குக் குடிநீர் வழங்கும் திட்டம்; அவிநாசி, அத்திக்கடவு குடிநீர்த் திட்டம்; நரியனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவை இந்த ஆண்டு உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற செய்தி;

கோவை, மதுரை, திருநெல்வேலி, மாநகராட்சிகளிலும், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், அம்பத்தூர், ஈரோடு, கரூர் நகராட்சிகளிலும் பாதாளச் சாக்கடை வசதிகளை அளிக்கும் திட்டம் 269 கோடி ரூபாய்ச் செலவிலே வரும் ஆண்டிலே தொடங்கப்படும் என்ற செய்தி;

பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதி, அடையாறு ஆகிய நீர் வழிகளை மேம்படுத்தும் திட்டம்; 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் பணிகள்;