கலைஞரின் சட்டமன்ற உரைகள்
367
வைக்கப்பட வேண்டும், நெற்றி முழுவதும் பொட்டு வைத்துவிட முடியாது. அப்படி வைத்தால் அது பொட்டாக இருக்காது, பொட்டு வைப்பதற்கும் துட்டு வேண்டியிருக்கிறது இப்போது இந்த அரசுக்கு என்பதை உணர வேண்டும். அதுபற்றியும் என் பேச்சின் இறுதியில் நான் கூற இருக்கின்றேன்.
நம்முடைய திரு. திருநாவுக்கரசு அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கை பற்றி ஆற்றிய உரை, அதிலே குறிப்பிட்ட சில செய்திகளைப் பற்றி விளக்கம் அளிக்க விரும்புகின்றேன். அவர்களும் கேட்டார்கள். இந்தப் பற்றாக்குறை பற்றி பல கட்சித் தலைவர்களும், உறுப்பினர்கள்கூட ஐயப்பாடுகளை எழுப்பி இவைகளையெல்லாம் எப்படிச் சீர் செய்யப் போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்கள். அதிக அளவிற்குப் பற்றாக்குறை வந்திருக்கிறது என்றுகூட குறிப்பிட்டார்கள். நான் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்ல விரும்புகின்றேன். 1989-90ஆம் ஆண்டு இந்தப் பற்றாக்குறை மதிப்பீட்டுக் கணக்கில் 147.67 கோடி ரூபாயாக இருந்தது. பிறகு அது இறுதிக் கணக்கில், அந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டுக் கணக்கில் பிளஸ் 9.39 கோடி ரூபாயாக ஆயிற்று. 1990-91 ஆம் ஆண்டு இந்தப் பற்றாக்குறை மதிப்பீடு, நிகரப் பற்றாக்குறை 349.36 கோடியாக இருந்தது. பிறகு அது கணக்கில் ஒரு கோடி கோடி ரூபாய் பிளஸ் என்று ஆயிற்று. 1991 - 92ல் இந்த நிகரப் பற்றாக்குறையினுடைய மதிப்பீடு 577.41 கோடி ரூபாயாக இருந்தது. பிறகு கணக்கில் 577 கோடி அதிகமாகாமல் குறைந்து மைனஸ் 239.75 கோடி என்று ஆயிற்று. 1992-93ல் 217.62 கோடி என்ற நிகரப் பற்றாக் குறையாக மதிப்பீட்டிலே இருந்து பிறகு கணக்கிலே அது குறைந்து 34.23 கோடி என்று ஆயிற்று. 1993-94ல் மதிப்பீட்டில் நிகரப் பற்றாக்குறை 359.95 கோடி என்று இருந்து, பிறகு கணக்கில் மைனஸ்125.45 கோடி என்று ஆயிற்று. 1995-96ல் நிகரப் பற்றாக்குறை ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் என்று மதிப்பீட்டிலே இருந்து பிறகு கணக்கிலேகூட பிளஸ் 116.45 கோடி என்று ஆயிற்று. 1996-97ல் இந்த ஆட்சி பொறுப்பேற்ற காலகட்டத்தில் நிகரப் பற்றாக்குறை 334.89 கோடி என்று இருந்து, பிறகு கணக்கில்