பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

நிதிநிலை அறிக்கை மீது

சில

சில குற்றச்சாட்டுகளை, போகிற போக்கில் விஷயங்களை வேடிக்கையாகவும். அதேநேரத்தில் இப்படியும் இருக்குமா என்று என்று வியப்படையக்கூடிய வகையிலே நம்முடைய தாமரைக்கனி அவர்கள் சில குற்றச்சாட்டுகளைச் சொல்வது உண்டு. இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக. அன்றைக்கு விவாதம் வந்தபோது அவர்கள் சொன்னார்கள், ஆயிஷா என்ற அந்தப் பெண் ரூ.10 இலட்சத்தை அவருடைய தாயாரிடத்திலே கொடுத்து வங்கியிலே போட்டிருப்பதாகச் சொன்னார்கள். பத்திரிகைகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. நானும்

னடியாக அதுபற்றி விசாரிக்கப்படும் என்று சொன்னேன். உடனடியாக காவல் துறைக்கு ஆணையிட்டு அதை விசாரிக்கச் சொன்னேன். அவர்கள் தந்துள்ள தகவலின்படி மம்சாபுரத்திலேயுள்ள யூ.கோ. வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை வங்கி ஆகியவற்றில் விசாரிக்கப்பட்டபோது, சங்கீதா பேரில் கணக்கு எதுவும் இல்லை என்றும், அவர்கள் பெற்றோர் பேரிலும் பணம் ஏதும் போடப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், திருவில்லிபுத்தூரிலுள்ள 4 வங்கிகளிலும், சிவகாசிப் பகுதியிலே உள்ள 14 வங்கிகளிலும் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இந்தத் தகவல் சரியானதல்ல என்று தெரிய வந்துள்ளது. சங்கீதாவினுடைய பாட்டனார், தந்தை, பெரியப்பா ஆகியோர் வங்கிகளில் பல்வேறு தேதிகளில் விவசாயத்திற்காகக்

கடன்

வாங்கியிருக்கிறார்கள் என்று மாத்திரம்தான் தெரிய வந்திருக்கின்றது. தாமரைக்கனி அவர்கள் (சிரிப்பு)- இதிலே சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அவருக்குத் தெரியாமல் தகவல் வந்திருக்கலாம். தாமரைக்கனி இதற்கு மேலும் விவரம் தெரிவித்து, எந்த வங்கியிலே போட்டிருக் கிறார்கள் என்ற குறிப்பையும் சுட்டிக்காட்டுவாரேயானால் நிச்சயமாக நடவடிக்கை எடுத்து அந்தத் தொகையும் மீட்கப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதைப்போலவே, இன்னொன்றையும் சொன்னார்கள். செண்பகத்தோப்பிலே கோவிந்தசாமி நாடாருக்குச் சொந்தமான ஒரு கிணற்றிலே வெடிபொருட்கள் போடப்பட்டுள்ளன என்ற ஒரு தகவல் இங்கே கூறப்பட்டது. அதையும் காவல்துறையை