பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

109 நிதிநிலை அறிக்கை மீது

கழகமானாலும். திராவிட இயக்கமானாலும், திராவிடர் கழகமானாலும், நாங்கள் சிறுபான்மைச் சமுதாயப் பிரச்சினைகளிலே இன்றைக்கு மதச்சார்பற்ற அரசு வேண்டும், மதச்சார்பற்ற கொள்கை வேண்டும் என்று சொல்கின்ற இங்கேயிருக்கின்ற யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களானாலும், என்ன சொல்கிறோம்? சிறுபான்மையினர், பெரும்பான்மை சமுதாயத்தை மதித்து நடக்க வேண்டும். அதேபோல், பெரும்பான்மை சமுதாயத்தினர், சிறுபான்மை சமுதாயத்தை அரவணைத்து, ஆதரித்து, அனுதாபம் காட்டி நடக்க வேண்டும். இப்படி இருவருமே நடந்துகொண்டால் பிரச்சினையே கிடையாதே. எனவேதான், இந்தக் குண்டு வெடிப்புகள் ஏற்படுவதற்கான மூலக்காரணங்களையெல்லாம் இன்றைக்கு நான் ஆராய்ந்து கொண்டிருக்க விரும்பவில்லை. அதைப்பற்றி ஐ.ஜி. தலைமையில், ஒரு திறமையான ஐ.ஜி. தலைமையிலே வெகு தீவிரமாகப் புலன் விசாரணை நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. பல குற்றவாளிகள் பிடிபட்டிருக்கின்றார்கள். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

என்று

இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை கேட்கின்றார்கள். எத்தனையோ காரியங்கள் நடைபெற்றிருக் கின்றன. இதே இடத்திலேதான் அண்ணா அவர்கள் நின்றுகொண்டு சொன்னார்கள். சில காரியங்கள் மின்னல் வேகத்திலே நாட்டிலே நடைபெற்று விடுகின்றன. மின்னல் எப்போது தோன்றும் என்பதை எதிர்பார்க்க முடியாது. அப்படித் தோன்றிய நிகழ்ச்சிகளை அவை நடைபெற்ற பிறகு இனித்தோன்றாமல் இருப்பதற்காக நாங்கள் சென்று நடவடிக்கை எடுக்கிறோம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். கோவையிலே இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்று இருந்ததால் இந்த அவையிலே விளக்கி யிருக்கின்றேன். மத்தியப் புலன் ஆய்வுக் குழுவின் சார்பாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதற்கு முன்பே மாநிலப் புலன் ஆய்வுக் குழு இந்தத் தகவலை எங்களுக்குத் தெரிவித்திருக்கிறது. இப்படி வரிசையாக வந்த தகவல்களை எல்லாம் நாங்கள் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி யிருக்கின்றோம். கோவை மாவட்டத்திற்கும், கோவை