பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

395

4 சதவிகிதமாகவும். முத்திரைச் சின்னம் இடப்பட்ட பிற மசாலாப் பொடிகளுக்கு 16 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாகவும் வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். மசாலாப் பொடிகள் சிறு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 1991ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் வரி கட்டவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதற்குப் பரிந்துரை செய்தவர்கள் திரு.சுதர்சனம், திரு.ஆர்.ஆர். சேகரன், திரு. எஸ்.என். பாலசுப்பிரமணியன், திரு. ஞானசேகரன், திரு. ராஜ்குமார் மன்றாடியார். திரு. ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் பரிந்துரை செய்து பேசியிருக்கிறார்கள். ஆனால் கடந்த 1997 ஆம் ஆண்டு சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிற ஆணையில், முத்திரைச் சின்னம் உள்ள பொடிகளுக்கு 16% வரி செலுத்தவேண்டுமென்று தெரிவித்திருக்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் இந்த 16% வரியைத்தான் நிதிநிலை அறிக்கையில் 11% என்று குறைத்து நான் அறிவித்திருந்தேன், என்றாலும் இந்த மசாலாப் பொடிகளுக்கு வரியைக் குறைக்கவேண்டுமென்று உறுப்பினர்கள் பலரும், அதன் உற்பத்தியாளர்களும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று, வணிகச் சின்னம் உள்ள மசாலாப் பொடிகளுக்கு 4% என்றும், வணிகச் சின்னம் இல்லாத மசாலாப் பொடிகளுக்கு 2% என்றும் வரி குறைப்பு செய்யப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

மசாலாப்

சலவைக்குப் பயன்படுத்தப்படும், கையினால் செய்யப் படும் சொட்டு நீலத்திற்கும், வணிகச் சின்னம்கொண்ட பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சொட்டு நீலத்திற்கும் ஒரே விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இது குறித்து பேராசிரியர் தீரன், செங்கை சிவம் இந்த அவையிலே கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கையை ஏற்று சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும், கையினால் செய்யப்படும் சொட்டு நீலம் உட்பட, சலவை வெளுப்பானுக்கு Hand made laundary Brightner-க்கு 16% லிருந்து 4% ஆக வரி குறைப்பு