பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

ரூ

РГЂ

நிதிநிலை அறிக்கை மீது

வழங்கப்படும் ரக மானியம், வாகன வாடகை மானியம் 35-ஐயும் கணக்கில் எடுத்துக்கொண்டால் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.695-ம் அதிகபட்சம் ரூ.880-ம், சராசரியாக ரூ.765-ம் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் விவசாயி களுக்குத்தான். கரும்பு விவசாயிகளுக்கு ஆயிரம் என்று சொன்னீர்களே, ஆயிரம் என்று சொன்னீர்களே என்றால், 5 வருடம் முடியவில்லையே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று சொன்னோம். ஆயிரம் வேண்டுமென்றால் 5 வருடம் முடியட்டும், முடியவிடுங்கள். (சிரிப்பு).

த்

காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களில் நீர்ப்போக்கிற்கு இடையூறாக உள்ள காட்டாமணக்குச் செடிகளை அகற்ற, 2,384 ஹெக்டேர் பரப்பில் களைக்கொல்லித் தெளித்து, காய்ந்த இலைகள் அகற்றி எரிக்கப்பட்டது. இதற்காக 102 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. நீண்டகாலம் கிடப்பிலே போடப்பட்டிருந்த காவிரிப் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு நடப்பாண்டில் ரூ.10 கோடிக்கு மேற்பட்ட செலவிலான பணிகள் நேர்த்தியாக நடைபெற்றன. வருமாண்டிலும் அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதற்கு முன்னர், பணிகள் முடிக்கப்படவுள்ளன. இதுவும் விவசாயிகளுக்குத்தான்.

சென்னை, மதுரை, பொள்ளாச்சி மற்றும் திருச்சி ஆகிய 4 மண்டலங்களிலே உள்ள 200 ஏரிகளில் தூர்வார 19.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இதுவும் விவசாயிகளுக்குத்தான்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் 2 ஆண்டுகளாக வறண்டு கிடந்த 22,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதுவும் விவசாயி களுக்குத்தான்.