பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

நிதிநிலை அறிக்கை மீது

தள்ளுபடி செய்தால் 'நபார்டு' வங்கி வருமாண்டுகளிலிருந்து எந்த நிதி உதவியும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கு அளிக்காது. அதுதான் ஒப்பந்தத்தின் ஷரத்து. நான் நேற்றைய முன்தினம், இங்கே முதலமைச்சர் அறையில் உட்கார்ந்து கொண்டு 'நபார்டு'க்கு பலமுறை பலமுறை போன் செய்தேன், அதிகாரிகள் மூலமாக. தலைமைச் செயலாளர், உணவுத் துறைச் செயலாளர், அமைச்சர்களெல்லாம் உட்கார்ந்து கொண்டு, நான், வேளாண்மைத் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் இவ்வளவு பேர்களும் உட்கார்ந்து கொண்டு இங்கேயிருந்து பலமுறை போன் செய்து அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர்கள் நிச்சயமாக முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதை மீறிச் செய்தால், வட்டியைத் தள்ளுபடி செய்தால், 'நபார்டு' வங்கி, வரும் ஆண்டுகளிலேயிருந்து எந்த நிதி உதவியையும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்குத் தராது, இது ஒப்பந்தத்தில் இருக்கிற ஷரத்து. 1994-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஆண்டு வட்டியை மாத்திரமாவது தள்ளுபடி செய்ய அனுமதிக்க வேண்டுமென்று வங்கியினுடைய தலைவரோடு, தமிழக அரசினுடைய மூத்த அதிகாரிகளைப் பேசச் சொன்னேன். எனினும், 'நபார்டு' வங்கியினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, வேறு வழியின்றி, தமிழக அரசின் சக்திக்கு ஏற்றவகையில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற குறுகிய காலக் கடன்களை மத்திய

காலக்

கடன்களாகவும், மத்திய காலக் கடன்களை நீண்டகாலக் கடன்களாகவும் மாற்றியமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) நீண்டகாலக் கடன்களுக்கும் இதுபோன்ற கால நீட்டிப்பு வழங்கப்படும். இதனால், விவசாயிகள் அபராத வட்டியாக சுமார் ஐம்பது கோடி ரூபாய் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

இன்னொன்று, அன்றைக்குப்பேசிய நம்முடைய உறுப்பினர் திரு. பெ.சு. திருவேங்கடம் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்பை எடுக்காத காலகட்டத்தில், விவசாயிகளே தாங்கள் விளைவித்த கரும்பை அரவை செய்வதற்கு, தங்களுக்கு