கலைஞரின் சட்டமன்ற உரைகள்
421
எந்தத் திட்டங்களும் இல்லை என்று நம்முடைய நண்பர் உறுப்பினர் அழகிரி அவர்கள் ஒரு பத்திரிகையிலே சொல்லியிருக்கிறார்.
450 கோடி ரூபாய் செலவில் 208 பாலங்கள் இந்த அறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கிறது.
20 கோடி ரூபாய் செலவில் காரனோடை பாலம்.
12 கோடி ரூபாய் செலவில் கரூர் பாலம்.
43 கோடி ரூபாய் செலவில் தாம்பரத்திலிருந்து மதுரவாயல் வரையில் சென்னை புறவழிச் சாலை.
36 கோடி ரூபாய் செலவில் மதுரை புறவழிச் சாலை. 92 கோடி ரூபாய் செலவில் கோவை புறவழிச் சாலை. 212 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகரத்தில் ஆரச்சாலைகளை மேம்படுத்தும் பணி.
256 கோடி ரூபாய் செலவில் நபார்டு உதவியோடு ஊரக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்.
500 முதல் 1,000 வரை மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலை. 1000க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட எஞ்சிய 301 கிராமங்களுக்கும் ணைப்புச் சாலை.
சாலைப் பராமரிப்புக்காக 270 கோடி ரூபாய்.
75,850 எக்டேர் பரப்பில் 96.73 கோடி ரூபாய் செலவில் காடு வளர்க்கும் பணி.
50 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணி.
மேலும் இந்த ஆண்டு,
219 கோடி ரூபாய் செலவில் பாசன மேம்பாட்டுத் திட்டங்கள்.
8.94 கோடி ரூபாய் செலவில் நிலையூர் கால்வாய்த் திட்டம்.