பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

429

கோடி ரூபாய் என்று கடந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் அது திருத்த மதிப்பீட்டில் 14,198 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது என்றும், அதற்கு முக்கிய காரணம், மத்திய வரிகளின் பங்கும் மாநிலத்தின் சொந்த வரி வருவாயும் 1998-99ஆம் ஆண்டுக்கான திருத்திய மதிப்பீட்டில் குறைந்துவிட்டதே, என்ன காரணம் என்றும் அவர் கேட்டார். 1997-98ஆம் ஆண்டின் கணக்கின்படி மத்திய வரிகளின் பங்காக நமது மாநிலத்திற்கு ரூபாய் 2,728 கோடி ரூபாய் கிடைத்தது. 1998-99ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய வரிகளின் பங்கு ரூ. 2,920 கோடியாக இருக்குமென்று கடந்த ஆண்டு திட்ட மதிப்பீட்டில் நாம் குறிப்பிட்டிருந்தோம். நமது மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு, மத்திய அரசு நிதிநிலை அறிக்கை அளிப்பதற்கு முன்பாகவே தயாரிக்கப்பட்டதால், அந்தச் சமயத்தில் மத்திய அரசும், மத்திய திட்டக்குழுவும் தெரிவித்தபடி மதிப்பீடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டியிருந்தன. ஆனால், மத்திய அரசு அதன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது இன்னும் குறைத்து மாநில அரசின் பங்கு ரூபாய் 2,413 கோடியாகக் குறைத்து மதிப்பிட்டது. இவ்வாண்டு மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி நமது மாநிலத்திற்கு 1998-99இல் ரூ. 2,408 கோடி மத்திய வரிகளில் நமது மாநிலத்தின் பங்காக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் வரி வசூல் குறைவும், தாமாகவே முன் வந்து வருமானத்தைத் தெரிவிக்கும் திட்டத்திலும், VDIS மாநில அரசின் பங்கு முழுமையாக கடந்த ஆண்டிலேயே அளிக்கப்பட்டதே இக்குறைவுக்குக் காரணம். கடந்த ஆண்டிலே அளித்துவிட்டார்கள். அதனால், இந்த ஆண்டு அவர்கள் அளிக்கவில்லை. அது இந்தக் குறைவுக்கு ஒரு காரணம். மாநில சொந்த வரி வருவாய் 1998-99ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 10,024 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திருத்திய மதிப்பீட்டிலே 9,625 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், விற்பனை வரியின் குறைவான வசூலாகும். வரிச் சலுகைகள் வழங்கியவை, மாநிலத்தில் மோட்டார் வண்டிகள், ஜவுளி தொழில் ஆகிய தொழில்களில் நிலவும் மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக விற்பனை வரி,

,