கலைஞரின் சட்டமன்ற உரைகள்
433
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாணவர்கள் கழகங்களுக்கு அமைப்பாளர்கள் உண்டு. (மேசையைத் தட்டும் ஒலி).
-
தலைவர் அவர்களே, அடுத்து, மானிய உதவிகள் இதைத்தான் நம்முடைய சுப்பராயன் அவர்களுக்கு, சுப்பராயன் அவர்களுக்கு மாத்திரமல்ல, சொக்கரே கூட ஒரு துண்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்; படித்துப் பார்த்தேன். - மானிய உதவிகளை அளித்ததில் இந்த அரசு மிகவும் ஆடிப் போய் இருக்கிறது; என்ன திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று இந்த மானியங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இந்த மானியங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்தியிலே ஒரு சர்க்கார் இப்போது வந்திருக்கிறது. அதற்கு ஏதோ ஒரு வகையிலே உதவிகரமாக நீங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் நான் கேட்கிறேன், இந்த மானியத்திலே எதைக் குறைக்கலாம் ? இதைத்தான் தொங்கு சதை என்றார் நம்முடைய சுப்பராயன் அவர்கள்; இந்தத் தொங்கு சதையிலே எந்தச் சதையை கழிக்கலாம் என்பதை நான் படித்துக் காட்டுகிறேன்; தயவு செய்து சொல்லுங்கள். (குறுக்கீடு) இருங்கள் படித்து விடுகிறேன்.
பொது விநியோகத் திட்டத்திற்காக உதவித்தொகை நிதியொதுக்கம் ஆயிரம் கோடி ரூபாய்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டண இழப்பீட்டை ஓரளவு சரிக்கட்ட மானியம் 250 கோடி ரூபாய். இஃதன்னியில் மின் வாரியத்திற்கு 1900 கோடி ரூபாய் இலவச மின்சாரத்துக்காக ஆகிறது. அதிலே அரசு கொடுக்கின்ற மானியம் 250 கோடி ரூபாய்.
சத்துணவுக்கு ஏற்படுகின்ற செலவுக்கு, மாத்திரம் 532 கோடி ரூபாய்.
நிதி உதவி பெறும் அரசுசாரா தொடக்கப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு மானியம் 947 கோடி ரூபாய்.
15 - க.ச.உ. (நிஅ) ப-2