பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

கதர் தள்ளுபடி மற்றும் தமிழ்நாடு கதர் மற்றும் கைத்தொழில் வாரியத்திற்கான மானியம்.

வேளாண் மற்றும் கால்நடை

பல்கலைக்கழகங்களுக்கு

435

17.75 கோடி ரூபாய்

அளிக்கப்படும் மானியங்கள் 67.00 கோடி ரூபாய்

இலவச வீட்டுமனைக்கான ஒதுக்கீடு 36.68 கோடி ரூபாய் படிப்புதவித் தொகை 85.14 கோடி ரூபாய்

எனவே, இந்த இனங்களுக்கான மொத்த ஒதுக்கீடு சுமார் 5,500 கோடி ரூபாய்.

இதிலே, எந்த இனத்தை மானியம் வழங்காமல் நடத்தலாம் என்பதைச் சொன்னால், அந்த தொங்கு சதையை உடனே வெட்டியெறிய நான் தயாராக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (சிரிப்பு) சொல்லிவிட்டு நீங்கள் வெளியே போக முடியுமா என்பதை மாத்திரம் தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். (சிரிப்பு)

கிராம மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று மெத்த வருத்தத்தோடு, ஆதங்கத்தோடு நம்முடைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள். சிலவற்றைப் பாராட்டிவிட்டு, ஆனால் கிராம மக்களைத் தொடக்கூடிய எந்தத் திட்டமும் இல்லை; அவர்களை வாழ வைக்கக் கூடிய திட்டம் எதுவும் இல்லை என்று சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 65 விழுக்காடு ஊரகப் பகுதிகளில் வாழ்ந்து வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய நலனைக் கருதி அரசு பல்வேறு துறைகளின் வாயிலாகச் செயல்படுத்தும் திட்டங்களுக்காக 3,755 கோடி ரூபாயை வரும் ஆண்டில் செலவிடவிருக்கிறது என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.