பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

445

கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, மாநில அரசு உற்பத்திக்குரிய பொருட்களை ஒதுக்கீடு செய்தல் சட்டம் (Reservation Articles for protection Act, 1985) செயல்படுத்தி, அமலாக்கப் பிரிவை ஏற்படுத்தி, சேலம், திருச்செங்கோடு, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் செயல்படுத்தி வருகிறது.

இந்த அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளினால் கைத்தறி நெசவாளர்கள் பயனடைந்துள்ளார்களே தவிர, பசி பட்டினியால் யாரும் பதைக்கப் பதைக்க உயிர் விடவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள வேண்டியவனாக இருக் கின்றேன்

து

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் பற்றி இங்கே பேசப்பட்டது நம்முடைய பழனிசாமி அவர்களும் சொன்னார்கள். மற்றவர்களும் இங்கே இதைப்பற்றிச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதிலே கல்வித் தகுதியை ஏன் எட்டாவது என்பதை பத்தாவது என்று மாற்றினீர்கள் என்று கேட்டார்கள். அதை 1989 ஆம் ஆண்டு அறிவித்தபோது 5,000 ரூபாய்தான். திருமண உதவியாக, நிதியாக அரசு வழங்கியது. அதற்குப் பிறகு நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் இதை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இதிலே சான்றிதழ் வாங்குவது பெரும் சுமையாக இருக்கிறது. அதை வாங்கப் போகின்ற இடத்தில் - எதிர்க்கட்சித் தலைவரே இங்கே எது எதற்கு என்னென்ன ரேட் என்று, அப்படி சில ரேட்டுகளை அடிமட்டத்தில் இருக்கின்றவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், கொடுத்தால்தான் கிடைக்கும் என்கின்ற ஒரு சந்தேகத்தோடு கொடுத்து அந்தச் சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவல நிலை அந்தப் பண்களுக்கு இருக்கிறது அந்தப் பெண்களைப் பெற்றவர்களுக்கு இருக்கிறது. 10,000 ரூபாய் என்றால் ரூ. 2,000 ரூபாய் போனால் என்ன, 8,000 ரூபாயாவது கிடைக்கின்றதே என்கின்ற எண்ணத்தோடு 2,000 ரூபாய் தர வேண்டியிருக்கிறது. சில இடங்களில் பாதிக்குப் பாதிகூட அவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை. இந்தச் செய்திகள்

சொன்னார்

-